தோல்வின்னு சொன்னவங்க முகத்துல கரியை பூசணும்! மீண்டும் ரிஸ்க் எடுக்கும் உதயநிதி?

சூரத்தேங்காய் நெத்தியில அடிச்சு ஒரு வாரம்தான் ஆச்சு. அதற்குள் மறுபடியும் ஒரு தேங்காய்க்கு ஆர்டர் பண்ணிவிட்டாராம் உதயநிதி. இந்த முறையாவது நெற்றி தப்பிக்குமா? பார்க்கலாம்…

சந்தானம் இல்லாமல், நகைச்சுவை இல்லாமல் உதயநிதியை மக்களிடம் காட்டி ஜெயிக்க வைக்க முடியும் என்று நம்பிய கெத்து பட டைரக்டர் திருக்குமரன் அப்பாவியா? அதையெல்லாம் உண்மை என்று நம்பி கழுத்தை கொடுத்த உதயநிதி அப்பாவியா? கட்டிங் போட்டுவிட்டு யோசித்தாலும், கணக்குக்குள் சிக்காத கடுமையான கேள்வி இது. இருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்கு ஓப்பனிங் ஷோவிலேயே சங்கு ஊதினார்கள் ரசிகர்கள். ‘நடிகர் திலகத்துக்கு அப்பால நீங்கதான்’ என்று எழுதிய முன்னாள் பெய்டு டுபாக்கூர் கிரிட்டிக்ஸ்கள் (என்று சொல்லப்படும் ஆர்வக்கோளாறு) விமர்சகர்கள் கூட இந்த முறை ஐ ஆம் ஸாரி உதயநிதி என்று கூறிவிட்டார்கள்.

‘அட… பத்துக்கு மூணு மார்க் கூட கொடுக்கலையே?’ என்று ஒருபுறம் வேதனைப்பட்டாலும், அவர்கள் முகத்தில் கரியை பூசணும் என்று முடிவெடுத்துவிட்டாராம் உதயநிதி. மீண்டும் அதே இயக்குனர் திருக்குமரனை அழைத்து, நாம மறுபடியும் ஒரு படம் பண்றோம். இந்த முறை ஜெயிக்கணும். அது ஒன்றுதான் உங்க குறிக்கோளா இருக்கணும். நல்ல கதையா ரெடி பண்ணிட்டு வாங்க என்று கூறிவிட்டாராம். ஆனால் இந்த முறை பட்ஜெட் 8 கோடியை தாண்டக் கூடாது என்கிற சின்ன நிபந்தனையோடு.

அதற்கு நடுவில் அவர் இரண்டு படங்களை முடித்துவிட்டு திரும்பி வருவாராம் இவரிடம். தோற்றவருக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு தருவதென்பது நல்ல விஷயம்தான்! ரிஸ்க் எடுப்பது இவருக்கெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரிதானே!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் சாரை பார்த்தால் சொல்றீங்களா? காத்திருக்கும் இளம் நடிகை!

“முன்பெல்லாம் யார் கூட நடிக்கணும்னு ஆசை?” என்ற கேள்வியை கேட்டால் ரஜினியுடன் என்பார்கள் நடிகைகள். இப்போது அப்படியே உல்டா! அஜீத் சாருடன் நடிக்கணும் என்றோ, விஜய் சாருடன்...

Close