அட இப்படியும் ஒரு பிழைப்பா? ச்சீய்! தொட்ரா பட உண்மைகள்!
“அட ச்சீய்… இதெல்லாம் ஒரு பொழப்பா?” என்று படம் முடிந்து வெளியே வருகிற அத்தனை பேரையும் கேள்வி கேட்க வைக்கப் போகிறது ஒரு படம். அதற்குப் பின் அப்பட டைரக்டரின் முதுகில் ‘டின்னு’ கட்டப்படும் போல தெரிவதால், முன் கூட்டியே காக்கிகளின் கவனத்திற்கு படத்தை கொண்டு செல்லும்படி எச்சரிக்கை செய்வதும் நம் கடமை.
வேறொன்றுமில்லை. ‘தொட்ரா’ என்றொரு படம் ஜுலை மாதம் வெளியாகப் போகிறது. கதை? ஊரிலிருக்கிற பணக்கார பெண்ணை காதலிக்க வைப்பது. அதற்காக சம்பந்தப்பட்ட இளைஞனுக்கு செல்போன், காஸ்ட்லியான சட்டை பேன்ட், பைக் போன்ற ஐட்டங்களை இலவசமாக சப்ளை செய்வது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், இன்னபிற ஆதாரங்களையும் சேகரித்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட இளைஞனுக்கு சிறிதளவு பணத்தை கொடுத்து விரட்டிவிடுவது. அதற்கு ஒப்புக் கொள்ளாத இளைஞனை கட்டி வைத்து உரிப்பது. அதற்கப்புறம் பெண் வீட்டில் பேரம் பேச ஆரம்பிப்பது.
இதெல்லாம் கற்பனையல்ல… நிஜமாகவே இத்தகைய தொழிலை செய்து வருகிற ரவுடி குரூப்புகளை தொடர்ந்து கவனித்து, அவர்களில் சிலரையே நடிக்கவும் வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் மதுராஜ்.
பழைய நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ருத்வி ஹீரோ. வீணா என்ற அழகி ஹீரோயின். ஒரு முக்கிய ரோலில் அறிமுகமாகியிருக்கும் எம்.எஸ்.குமார்தான் இப்படத்தின் தயாரிப்பாளர்.
எப்பவோ ரிலீசாகியிருக்க வேண்டிய படம். காலா வருதுன்னு தள்ளிப் போக சொன்னாங்க. இப்போ கடைக்குட்டி சிங்கம் வருதுன்னு சொல்றாங்க. வர்ற படங்கள் வந்துகிட்டுதான் இருக்கும். அதனால் தயங்காம சிங்கத்தை எதிர்க்க இறங்கிட்டோம்.
தொட்ராங்குது சிங்கம். அதை துரத்தியடிப்பீங்களா மதுராஜ்?