உன் சமையலறையில் – விமர்சனம்

கோடம்பாக்கமே ஒரு பெரிய கொத்து பரேட்டா சட்டியாகிக் கொண்டிருக்கிறது. அந்த ‘சட்டியும் காரம். சமையல்காரனின் எரிச்சலும் அதன் ஓரம்’ என்பது போலவே இருக்கிறது எல்லா படங்களும். இந்த அசந்தர்ப்பமான சூழலில்தான், ஆர அமற மர நிழலில் உட்கார்ந்து பாட்டி சுட்ட வடையை பந்தி பரிமாறுகிறார் பிரகாஷ்ராஜ். அத்தனை கவளங்களுக்குள்ளும் ஒளிந்திருக்கிறது ஆர்ப்பாட்டமில்லாத ருசி.

நாற்பதை கடந்த பின்பும் ஏனோ கல்யாணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே போகும் பிரகாஷ்ராஜ், சரியான சாப்பாட்டு ராமர்! பெண் பார்க்க போகுமிடத்தில் அந்த சமையலின் ருசிக்கு அடிமையாகி அந்த சமையல்காரரை மட்டும் கையோடு அழைத்து வருகிற அளவுக்கு போகிறது அவரது ருசி ராஜ்ஜியம். இன்னொரு பக்கம் இவரைப்போலவே ஒரு சாப்பாட்டு ராமியாக சினேகா. இவருக்கும் காலம் கடக்கிறதே ஒழிய கல்யாணம் நடந்தபாடில்லை. ஒரு ராங் நம்பர் பிரண்ட்ஷிப் வருகிறது இருவருக்குள்ளும். பேச்சு… பேச்சு… பேச்சு… ஆனால் அத்தனையும் சமையல் பற்றி. அதன் ருசி பற்றிதான்… ‘டேஸ்ட்’ ஒத்துப் போகிற இருவருக்குள்ளும் மெல்லிய காதல் பூக்க, நேரில் சந்திக்க நினைக்கிறார்கள்.

நமக்கு வயசாகிடுச்சே, காதோரம் நரை வந்திருச்சே… என்கிற தயக்கத்தில் தனக்கு பதிலாக தன் வீட்டிலிருக்கும் உறவுக்கார டீன் ஏஜ் பையன் தேஜஸ்சை அனுப்பி வைக்கிறார் பிரகாஷ். அவரும் நான்தான் அந்த போன் பார்ட்டி என்கிற போலிமுகத்தோடு செல்கிறார். அதே நிலைமைதான் அங்கேயும். கௌரி என்கிற தனது பெயரில் தன் உறவுக்கார பெண் சம்யுக்தாவை அனுப்பி வைக்கிறார் சினேகா. போன இருவரும் டீன் ஏஜ் என்பதால் பற்றிக் கொள்கிறது அவர்களுக்குள். தங்கள் காதல் வளர்வதற்காக அனுப்பி வைத்தவர்களின் காதலை அம்போவாக்குகிறார்கள் இந்த ஜோடிகள். நிஜத்தில் சம்பந்தப்பட்ட இருவரும் சந்தித்துக் கொண்டார்களா, வாழ்வில் இணைந்தார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்!

A சர்டிபிகேட் படங்கள் தெரியும். U சர்டிபிகேட் படங்கள் தெரியும். ISO முத்திரை குத்தப்பட்ட படங்கள் தெரியுமா? ‘என்னுடைய நிறுவனம் தயாரிக்கும் படங்கள்தான் அவை’ என்று இந்த முறையும் கம்பீரமாக நிரூபித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். படத்தில் இணைக்கப்பட்டிருக்கும் கிளைகளில் கூட இல்லை ஆபாசம்!

வடையை ஒரு கடி கடித்து அப்படியே உயிர் வரைக்கும் ருசிப்பதை எண்ணெய் விளம்பரங்களில் கூட இவ்வளவு துல்லியமாக பார்க்க முடியாது. தன் முகத்தில் வரவழைக்கிறார் பிரகாஷ்ராஜ். அப்படியே வெட்கம் மறந்து சூழ்நிலை மறந்து வேறொரு வீட்டின் கிச்சன் வரைக்கும் போய் சட்டமாக உட்கார்ந்து கொண்டு சமையல்காரரரை இன்டர்வியூ செய்கிற அந்த காட்சியே சொல்லிவிடுகிறது அவரது கேரக்டரை. இவருக்கும் சினேகாவுக்குமான நட்பு மெல்ல மெல்ல வளர்ந்து வேறொன்றாக மலர்வதை அவ்வளவு சுவாரஸ்யமாக காட்டுகிற திரைக்கதை, சில இடங்களில் மட்டும் கரண்ட் போன கிரைண்டராக தவிப்பதையும் சொல்லியே ஆக வேண்டும். இவர் ஒரு ஆதிவாசியை வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்துக் கொள்கிற அந்த எபிசோட் மட்டும், கதைக்கு தேவையில்லாத தடைச்செருகல்.

லேட் மேரேஜ் என்பது தன் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, தன்னை சுற்றியிருக்கிற தொண தொணப்பாளர்கள் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட என்பதை வலிக்க வலிக்க சொல்கிறது சினேகாவின் அழுகை. இந்த கேரக்டருக்கு மிக மிக பொருத்தமானவராக இருக்கிறார் சினேகா. அந்த கண்ணாடி அவரது அழகை மேலும் ஒரு ஸ்டெப் உயர்த்தி வைக்கிறது. (டிசைன் செய்த கைகளுக்கு ஒரு கங்கிராட்ஸ்) வேலியில்லா மாமரத்தில் யார் யாரோ காய் பறிக்க ஆசைப்படுவார்கள் என்பதையும் சுருக்கென சொல்லி திகைப்பூட்டுகிறது ஒரு காட்சி. இந்த படம் சிலரை அவசர முடிவெடுக்க வைக்கலாம். அதற்காகவும் படக்குழுவினருக்கு பாராட்டுகள்.

பிரகாஷ்ராஜ் படங்களில் மட்டுமே வரும் குமரவேல் இந்த படத்திலும் இருக்கிறார். அதே தனித்தன்மையோடும், ஷார்ப் வசனங்களோடும்! அப்புறம் தம்பி ராமய்யா. எந்த நேரத்தில் தன் வேலைக்கு வேட்டு விழுமோ என்கிற எச்சரிக்கையுடனேயே இருக்கிறார் எப்போதும். தன்னை குறை சொன்னால் கூட தாங்கிக் கொள்ளலாம். தன் சமையலை குறை சொல்லல் ஆகாது என்கிற அவரது சுய கவுரவம் நன்றாகவே ரசிக்க வைக்கிறது. அளவான டயலாக், அதை மீறிய எக்ஸ்பிரஷன் என்று வழக்கம் போலவே கலக்குகிறார் தம்பி.

இளம் ஜோடிகளான தேஜஸ்- சம்யுக்தாவின் காதல் தருகிற சுவாரஸ்யங்களை அசால்ட்டாக தட்டிவிட்டு முன்னேறியிருக்கிறது பிரகாஷ்ராஜ்- சினேகா சம்பந்தப்பட்ட காட்சிகள். இருவரும் சீக்கிரம் சந்தித்துவிட வேண்டுமே என்ற துடிப்பு ஒவ்வொரு வினாடியும் ஏற்பட துவங்கி விடுகிறது இடைவேளைக்கு பிறகு. அந்த நேரத்தில்…. அந்த பரபரப்பில்… ரெண்டு டூயட்டை வேண்டுமென்றே திணித்து செம எரிச்சல் மூட்டுகிறார்கள் டைரக்டர் பிரகாஷ்ராஜும், இளையராஜாவும்.

டைட்டில் பாடல் ஒன்றில் மட்டும் இளையராஜாவின் அந்த பழைய ‘கை’பக்குவம்! அந்த ட்யூனும் பாடியவரின் குரலும் ‘ராஜா ராஜாதான்…’ என்று ஆனந்த கூத்தாட வைக்கிறது. அதற்கப்புறம் ராஜா மண் குதிரையில் ஏறி ஆற்றை கடக்க ஆரம்பிக்கிறார். உதவாத ட்யூன்கள். ஒப்புக்கு பாடல்கள் என்று நரக வேதனை. இளையராஜாவின் குரல் வசீகரமும் போச்சு என்பதை யார் அவருக்கு உணர்த்துவது?

பாயசத்தில் ஏலக்காய் துவியதை போல படம் நெடுகிலும் ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடிக் கொண்டேயிருக்கிறது. காரணமான வசனக்காரர்கள், விஜி மற்றும் த.செ.ஞானவேல் தனி பாராட்டுகள். உணர்வை அட்டகாசமாக வெளிப்படுத்தும் லைட்டுங்குகள். ப்ரீத்தாவின் ஒளிப்பதிவும் அற்புதம்.

மலையாளத்தில் வெளிவந்த சால்ட் அண் பெப்பர் படத்தின் ரீமேக்தான் இது. அப்படத்திற்கு இணையாக சர்க்கரையும் நிறைந்திருக்கிறது தமிழில். இது சக போட்டியாளர்களை ‘புகைச்சலில்’ தள்ளுகிற அளவுக்கு விசேஷமான சமையலறைதான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

7 Comments
  1. thanbi velupraba says

    தரமற்ற விமர்சனம்..குறிப்பாக இசை பற்றி.
    Mr.அந்தணன், தொடர்ந்து..ராஜா, யுவன் இசை பற்றிய உங்களது விமர்சனம் தனிமனித தாக்குதலாகவே வெளிபடுகிறது..
    உங்களுக்கு ‘கேட்கும்’ (காது) திறன் குறைந்து விட்டது என்று நினைக்கிறன்..’அந்தணனுக்கு’ மட்டும் பிடித்த இசையை கொடுப்பதற்காக ராஜவும் யுவனும் பிறவி எடுக்கவில்லை..
    இந்த படத்தின் பாடல்களுக்கு என்ன குறையை கண்டு விட்டீர்கள்? அல்லது நீங்கள் என்ன இசையில் பெரிய விற்பன்னரா? உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ‘கேட்காமல் விட்டுவிடுங்கள்’ -ஒன்னும் குறைந்துவிடபோவதில்லை..அதுக்காக ‘உங்கள் ரசனை’- எல்லோருக்கும் பொதுவானதாக நினைத்துகொள்ளவேண்டோம்? இல்லையென்றால் ஒன்று செய்யுங்கள் நண்பரே..எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரே ஒரு பாடல் கம்போசிங் செய்துவிட்டு, பின்னர் ராஜாவுக்கும், யுவனுக்கும் கிளாஸ் எடுக்க போகலாம்..

    குறிப்பு:
    1. தங்கமீன்கள் படத்தின் இசை பற்றிய உங்கள் விமர்சனம் – மிக மிக கண்டிக்கத்தக்கது..

    2. எனக்கு தெரிந்து ‘டிஸ்டிரிபியுட்டர்சோ’/ ‘ரசிகர்களோ’- ‘அந்தணன்’ விமர்சனம் ‘படித்த’ பிறகு படம் வாங்கலாம்/ பார்கலாம் என்று நினைப்பதாக தோன்றவில்லை, அல்லது உங்கள் விமர்சனத்தினால் படம் ‘ஹிட்டோ/ ‘பிளாப்’ போ ஆவதில்லை..

    உங்களைபோல ஒரு சில விமர்சகர்கள் ‘தங்களை பெரிய அறிவு ஜீவியாக’ நினைத்துகொண்டு, எல்லோரும் போகும் பாதையை தவிர்த்து, வெகு ஜனங்களுக்கு பிடித்ததற்கு எதிராக ‘கருத்து சொல்லும் கந்தசாமிகளாக’ திரிகிறார்கள்!?

  2. Raj says

    Can some one tell rasa to stop singing. He spoiled the excellent tune in nee thaane yen ponvasantham also.
    He is not choosing the right singer also, recording is worst. Plastic instrument is used. Pecha kuraikonam..
    So many jalras around him, looks like his son is misguiding him.. Rasa innamum palaya nenaipilaye irukkaru.. Not updating with new technologies. Don’t know why he is so obsessed with symphony.. Its pathetic.

    1. thanbi velupraba says

      ..தோ..டா, ராஜாவுக்கு மியூசிக் கிளாஸ் எடுக்க என்னொரு வாத்தியார்..ஏன்யா! உங்களுக்கெல்லாம் எனன் ஆச்சி? உங்களுக்கு பாட்டு பிடிக்கவில்லேன்னா, கேட்கவேண்டாம் விட்டுவிடுங்கள்..அதுக்காக இது சரியில்லை/ அது சரியில்லை என்று எதையாவது உளறவேண்டோம்..

      இந்த படத்தில், ‘காற்று வெளியில்’ பாடலை-டவுன்லோட் பண்ணி கேட்காம ஒரிஜினல் CD வாங்கி கேளுங்கள்..’ஈரமாய் ஈரமாய்’ பாடலோட-இன்ஸ்ட்ருமென்ட்/ ஆர்க்கேஸ்ட்ரைசேசன் உங்களை அசத்தும்..எனக்கென்னவோ உங்களுக்கு ‘ராஜாவை’ பிடிக்கவில்லை, அதனால் தான் அவர் இசை/ பாடல்கள் பிடிக்கவில்லை..
      NEPV – ‘வானம் மெல்ல-சாங்க’ இன்னொரு முறை கேட்டுவிட்டு பிறகு பேசவும்..
      எனக்கென்னவோ உங்களுக்கு ‘ராஜாவை’ பிடிக்கவில்லை, அதனால் தான் அவர் இசை/ பாடல்கள் பிடிக்கவில்லை..

      1. Raj says

        Itho da innoru rasa oda jalra.. You guys think out of the box.. Ungala mathiri alungalala thaan rasa innamum palaya nenappulaye irukkarru..

  3. Raj says

    You are correct.. Only the “intha porappu thaan” song is listenable. All other songs ellam etho venda veruppa pottathu mathiri irukku…

  4. ashokudhal says

    only fools can dislike or tease Ilayaraja sir songs….

  5. ashok says

    Persons who criticise Ilayaraja songs are fools of INDIA

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காலையில் களஞ்சியம் மாலையில் அஞ்சலி சுட சுட ஒரு அறிக்கை யுத்தம்!

ஒரு நடிகை தான் நடித்துக் கொண்டிருந்த படத்தை பாதியிலேயே விட்டுவிட்டு போகலாமா? அப்படி போயிருந்தால், அந்த படத்திற்காக செலவு செய்யப்பட்ட தொகைக்கு யார் பொறுப்பு? இப்படியெல்லாம் பல...

Close