டிரைவர் மாற்றம்! ரூட் க்ளியர்…!! உத்தம வில்லன் ஃபுல் வேகத்தில்
ஏற்கனவே கொம்பன் படத்திற்காக குத்து வெட்டுகளை சமாளித்தவர்தான் ஞானவேல்ராஜா. குத்து சண்டை வீரனுக்கே பொண்ணை கட்டிக் கொடுத்துட்டா நண்டு சுண்டு மிரட்டலுக்கு வேலையிருக்காது என்று நினைத்தார்களோ என்னவோ? கொம்பன் படத்தில் எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து நிதானமாக படத்தை வெளியிட்டு நெத்தியடியாக வெற்றியை அள்ளிய ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திற்கே படத்தை கொடுத்துவிட்டது திருப்பதி பிரதர்ஸ்.
அட… ஆமாம்! உத்தமவில்லன் படத்தின் ரிலீஸ் பொறுப்பு இப்போது ஸ்டூடியோ க்ரீன் கையில்.
உத்தவில்லன் படத்தை தடை விதிக்க வேண்டும் என்று சில லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி உதார் விட்டுக் கொண்டிருக்கின்றன. வேறு சிலருக்கு தொடர் இருமல்… படத்தை வர விடக் கூடாது என்பதே அந்த இருமல் சப்தமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் சமாளிச்சு பழக்கப்பட்டவங்களே படத்தை ரிலீஸ் பண்ணட்டும் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது.
அது மட்டுமல்ல, தொடர் வெற்றிகளை குவித்து வருவதாலும், உத்தம வில்லன் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் தந்திருக்கிறது திருப்பதி பிரதர்ஸ். விரைவில் வெளிவர இருக்கும் ரஜினி முருகன் படமும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்புதான். அப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன்தான் வெளியிடுகிறது.
சுற்றி நில்லாதே பகையே, துள்ளி வருகுது வேல்! (ஹி…ஹி… கமலுக்கு பிடிக்காத ஆன்மீக ஸ்லோகமா இருந்தாலும், சுச்சுவேஷன் டயலாக் இதுதான் இப்போதைக்கு)
Thadaigalai thandi avaru vazhakkam pola oru dappa padam kudukka poraru. Ethukku evalau buildupa.Neenga kamal kitta kasu vangittu varam rendu news podrathu appatama theriyuthu.