சீரியஸ் கலைஞர்! சின்சியர் உதயநிதி? ஒரு சரியா, தப்பா டிஸ்கஷன்!

‘கழகத்தின் வருங்கால வைப்பு நிதி’ என்று கொண்டாடப்படும் உதயநிதி, தன் தொழிலில் எவ்வளவு சின்சியராக இருக்கிறார் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. தாலி கட்டுகிற நேரத்தில் போலீஸ் வர, தன் கட்சிக்காக கொள்கைக்காக தாலி கட்டிய கையோடு சிறைக்கு போனவர் கலைஞர் கருணாநிதி. அவரது பேரன் உதயநிதிக்கும் அப்படியொரு அக்கறை இருக்குமல்லவா?

‘பொதுவாக என் மனசு தங்கம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் அவர். தளபதி பிரபு இயக்கி வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடி நிவேதா பெத்துராஜ். கடந்த சில வாரங்களாக தேனி பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதே நேரத்தில் அவரது தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழக தலைவர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் அதிமுக்கிய தலைவர்கள் நேரில் வந்து அவரது உடல் நிலை குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் உதயநிதி தன் படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு சென்னை வரவில்லையே என்கிற வருத்தம் கழக தொண்டர்கள் இடையே இருக்கிறதாம். அவர் படப்பிடிப்பில் இருப்பது எப்படி தொண்டர்களுக்கு தெரிய வந்தது?

நாளிதழ்களில் வந்த ஒரு செய்திதான். தேனி பகுதியில் ஒரு கோவிலில் நடந்த படப்பிடிப்பை அனுமதியில்லாமல் நடத்தியதாக அறநிலையத்துறை தலையிட்டு நிறுத்திவிட்டது. இந்த செய்தி எல்லா நாளிதழ்களிலும் வர… “தலைவர் இப்படியிருக்கும்போது தம்பி படப்பிடிப்பில் இருக்குதே…” என்று வருந்தி வருகிறார்கள்.

கடமை முக்கியம்தான். அதைவிட தலைவரின்… இல்லையில்லை. தாத்தாவின் உடல்நிலை முக்கியமாச்சே?

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Balle Vellaiya Thevaa Press Meet Stills Gallery

Close