டைம் மிஷின்? தியாகராஜ பாகவதர் கிட்டப்பாவுடன் வடிவேலு! இது சொந்தப்பட ரிஸ்க்

பேச்சு பேச்சாதான் இருக்கணும். இந்த கோட்டை நானும் தாண்ட மாட்டேன், நீயும் தாண்டக் கூடாது என்று தனது சொந்த ஆபிசையும் வீட்டையும் சுற்றி ஒரு கோடு போட்டுக் கொண்டு வாழ்ந்த வடிவேலு எப்படியோ தனது கோட்டை தானே அழித்துவிட்டு வெளியே வந்தது நல்ல செய்திதான். ஆனால் வெளியே வந்த வடிவேலுவுக்கு தமிழ்சினிமாவும் ரசிகர்களும் தந்ததென்ன? முக்கா காசுக்கு ஒரு பதக்கம் கூட தேறவில்லை என்கிற வருத்தத்தைதான்! தோண்ட தோண்ட கிணறு பொங்குற மாதிரி ச்சும்மா பொங்கிகிட்டு வருது என்று இப்படத்தின் பிரஸ்மீட்டில் அவர் குறிப்பிட்டாரல்லவா? ஆனால் இப்படத்தின் நகைச்சுவை கிணறு பொங்குகிற மாதிரியா இருந்தது?

விமர்சனங்களை விடுங்கள். வடிவேலுவை நம்ப இனிமேலும் யாரும் தயாராக இல்லை. பிரபுதேவாவுடன் இணைந்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிற அளவுக்கு துவங்கிய பேச்சு வார்த்தையை, ‘அப்படியெல்லாம் ஒரு ஐடியாவே இல்லை’ என்று மாஸ்டரே மறுக்கிற அளவுக்கு அமைந்துவிட்டது தெனாலிராமன் ரிசல்ட். ரஜினியின் லிங்காவில் வடிவேலு இருப்பதாக பரவலாக பேச்சு எழுந்தாலும், அதை இன்று வரை யாருமே உறுதி படுத்தவில்லை. இந்த நிலையில்தான் வடிவேலு அந்த அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார்.

சொந்தப்படம்? இதுதான் வடிவேலுவின் திடீர் முடிவு. ‘யார் எனக்காக பணம் போட முன்வரலேன்னாலும், நானே எடுப்பேன்யா…’ என்று முண்டா தட்டிய வடிவேலு மீண்டும் ‘தெனாலிராமன்’ பட இயக்குனர் யுவராஜுடன் இணையும் படத்தை தனது சொந்த பணத்தில் எடுக்கப் போகிறாராம்.

ஒரு விஞ்ஞானி டைம் மிஷின் ஒன்றை கண்டு பிடிக்கிறார். அதில் ஏறி பழைய காலத்தில் போய் இறங்கும் வடிவேலு அங்கு செய்யும் அலப்பறைகள்தான் கதையாம். அந்த காலத்திலிருந்த தியாகராஜ பாகவதர், கிட்டப்பாவுடன் வடிவேலு நடிப்பதை போல கிராபிக்ஸ் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். கதையின் இறுதியில் அதே டைம் மிஷினில் ஏறி எதிர்காலத்திற்கு போய் இறங்குகிறாராம் வடிவேலு. அப்போது நடக்கப் போவதையும் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப் போகிறார்களாம்.

ஒருவேளை அவர் படத்தில் காட்டூம் எதிர்காலத்தில் இப்போதிருக்கும் வடிவேலு ஆட்சியை பிடிப்பது போல காட்சியை வைத்திருந்தாலும் சிரித்துவிட்டு கிளம்ப வேண்டியதுதான். ஜோக்குக்கு எதுக்குப்பா லாஜிக்கு?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இன்று படம் ரிலீஸ்… டைரக்டருக்கு அடி உதை! தாக்கிய மர்ம நபர்கள் தப்பியோட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி அங்குசம் என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் மனு கண்ணன். இந்த படத்தின் வரிவிலக்கு தொடர்பாக ஆளுங்கட்சி அமைச்சருக்கும் இவருக்கும் பிரச்சனை...

Close