த்ரிஷா வருமா கேளு… வடிவேலு விருப்பம்
இது த்ரிஷாவுக்கு வந்த சறுக்கலா? வடிவேலுக்கு வந்த பெருக்கலா? அந்த கடவுளுக்கே வெளிச்சம். கடந்த சில நாட்களாகவே வடிவேலுவின் திருட்டு முழி த்ரிஷா பக்கமாக திரிகிறதாம். கோயமுத்துர்ல கேட்டாக… கொடைக்கானல்ல கேட்டாக… என்று இப்பவும் த்ரிஷாவின் மவுசு தங்க கொலுசாகவே இருக்க, வடிவேலு எப்படி தைரியமாக லுக் விடுகிறார்? எல்லாமே இந்த கவிஞ்சருங்க படுத்துற பாடு. ‘ஆணழகு நீதான்’ என்று வடிவேலுவை பார்த்து பாடினால் சும்மா கிடக்கிற பீட் ரூட்டும் ஆப்பிளாகிவிடுமல்லவா? அப்படிதான் ஆகியிருக்கிறார் வடிவேலு. தெனாலிராமன் படத்தில் இவர் அந்தகால சிவாஜி போல நடந்து வர, கதாநாயகி இவரை பார்த்து ‘ஆணழகன்…’ என்று பாடுவதெல்லாம், யாரோ சரக்கடித்த ‘கவிஞ்சரின்’ கொழுப்பெடுத்த வரிகள் அல்லாமல் வேறென்ன?
போகட்டும்… இந்த வரி தந்த வலிமையினால் தான் அடுத்து நடிக்கவிருக்கும் (அதுலேயும் இவர் ஜீ… ஸாரி. ஹீரோ) படத்தில் தனக்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க கூப்பிடலாமே என்கிறாராம் வடிவேலு. இதற்காக முதல் கட்ட பேச்சு வார்த்தையையும் ஆரம்பித்திருக்கிறார்கள். ‘எவ்வளவு சம்பளம் வேணும்னாலும் தர அண்ணன் தயாராக இருக்காரு. நீங்க ஓ.கே ன்னு சொன்னா போதும்’ என்கிறார்களாம்.
அஜீத்துடன் ஜோடி சேர்வதற்கும் விஜய்யுடன் டூயட் பாடுவதற்கும் ரூட் போட்டுக் கொண்டிருக்கிற த்ரிஷா, யாருப்பா சொன்னது இங்க திண்ணை காலியா இருக்குன்னு? போயிட்டு வர்றீங்களா என்று ‘செல்லமாக’ பேசி அனுப்பி வைத்தாராம்.
நீச்சல் தெரிஞ்ச மத்தி மீனு வத்திப் போன குளத்துக்கா வாழ்க்கை படும்? அட போங்கப்பா…