டிஸ்ரிபியூட்டர் கண்கலங்கி தெருவுல விழுந்து அழுது புரண்டாங்களா? வடிவேலு குத்துவது யாரை?

கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும்… முதல்ல இதுக்கு பதில் சொல்லு என்கிற அளவுக்கு மூக்கு மேல் சிவப்பாகி கிடக்கிறார் வடிவேலு. அவரிடமே இரண்டு மூன்று பேர் கேட்டார்களாம். என்னவென்று? ‘தெனாலிராமன் ஓடலையா சார்?’ என்று.

கண்கள் சிவக்க அதற்கு பதிலளித்திருக்கிறார் அவர். ‘ஏன் நீங்க என்னைய வச்சு படம் எடுக்க போறீங்களா, இல்ல. அந்த படத்தை வாங்குனா டிஸ்ட்ரிபியூட்டரா?’ என்று. தெனாலிராமன் வெற்றிப்படம்னு அந்த தயாரிப்பாளருக்கு தெரியும். இல்லேன்னா மறுபடியும் ஒரு படம் பண்ணலாம்னு எங்கிட்ட கேட்ருக்க மாட்டாங்களே. அதுமட்டுமில்ல. இந்த படத்தை வாங்குனேன். நஷ்டமாயிருச்சுன்னு எந்த டிஸ்ரிபியூட்டராவது தெருவுல விழுந்து அழுது புரண்டாங்களா என்றும் கேட்டிருக்கிறார்.

ஒசரத்துல இருக்கிறவங்க பேசுனா ஒவ்வொன்னும் விவகாரம்தானே? இதையும் அப்படிதான் பார்க்குது உலகம். கடந்த சில மாதங்களாகவே டிஸ்ரிபியூட்டர் தெருவில இறங்கி போராடுன படம் எது என்று ஊர் உலகத்திற்கே தெரியும். இந்த நேரத்தில் வடிவேலு இப்படியொரு கேள்வி கேட்டால், அவர் யாரை வம்புக்கு இழுக்கிறார் என்ற கேள்வி எழும்தானே? எழுந்திருக்கிறது. வேறொரு பேட்டியில் இதற்கு பதில் சொல்வாரோ என்னவோ?

போகட்டும்… வடிவேலுவுடைய இப்போதைய முடிவு இதுதான். இன்னும் ஒரு படத்தில் ஹீரோவா நடிச்சுட்டு அப்புறம்தான் மற்றவர்களின் படங்களில் முன்பு போல காமெடி செய்யப் போகிறாராம். ஆமாமாம்… அதுக்குள்ள இப்ப இருக்கிற ஓட்டை ஒடைசல் காமெடியர்கள் சிலர் காணாமல் போகட்டும்… பின்ன என்னய்யா? கருணாகரனெல்லாம் சிரிப்பு நடிகர்னா காலம் பொறுத்துக்குமா?

Read previous post:
Natpadhigaram 79 trailer and audio links

https://www.youtube.com/watch?v=eqUe6GU6gSk https://www.youtube.com/watch?v=o-0HmJi0jpo

Close