என்னது… நான் முதலமைச்சரா? வடிவேலுவை அலற விட்ட கதை!
ஒரு குரூப்பாத்தான் அலையுறாங்களோ… என்று மறுபடியும் கொட்டாவி விட ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. கடைசியாக அவர் இறங்கி களம் கண்ட தெனாலிராமன், பலம் கொண்ட மட்டும் வழுக்கியதால், அண்ணே இப்போ மதுரையில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறாராம். சொந்தப்படம் எடுத்து மீண்டும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்பது அவரது திட்டமாக இருக்கிறது. ஆனால், அண்ணே… உங்களுக்கு தெரியாதது இல்ல. எதுக்கு சொந்தப்படம் எடுக்கணும். மறுபடியும் ஏஜிஎஸ் மாதிரி ஒரு பண முதலை சிக்குதா பாருங்க என்கிறார்களாம் அவரது நலம் விரும்பிகள்.
மீண்டும் கதை கேட்கும் படலத்தை துவங்கிய வடிவேலுவுக்கு துவங்கிய முதல்நாளே சங்கு பார்சல்.
கதை சொல்ல வந்தவர் பெரியார், பாரதி போன்ற வரலாற்று சிறப்பு மிக்க படங்களை தமிழுலகத்திற்கு தந்த ஞான.ராஜசேகரன். முனியாண்டி விலாஸ்ல தயிர் வடைக்கு என்ன வேலை என்கிற டவுட்டுடனேயே கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. அப்புறம்தான் தெரிந்ததாம். வடைக்குள் இருப்பது வெடிகுண்டு என்று. யெஸ்… அரசியல் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த கதையில் வடிவேலு கடைசியில் முதலமைச்சர் ஆகிவிடுவாராம். அவர் கதையை சொல்லி முடிக்கும் வரை காத்திருந்த வடிவேலு, அண்ணே… ரொம்ப நல்லாயிருக்குண்ணே. ஆனா உங்க கதைக்கு நான் வொர்த் இல்ல. என்னிய விட்ருங்க என்றாராம் கவலை பொங்க.
ஹ்ம்ம்ம்… இப்படியாகதான் கழிந்து கொண்டிருக்கிறது அண்ணனின் பொன்னான நேரங்கள்.