கமல் சிறுபிள்ளைத்தனமா பேசுவாரு… முன்னாள் மனைவி வாணி கணபதி எரிச்சல்!

எப்பவோ வச்ச மருதாணி இன்னைக்கும் கைய விட்டு அகலாதது போலல்ல சிலரது விவாகரத்துகள். அது மருதாணியல்ல. ஆனால் சிவப்புதான். அதுவும் சேர்த்து வச்ச நன் மதிப்புக்கெல்லாம் ஒரேயடியாக ரெட் லைட் அடிக்கிற சிவப்பு. 78 ம் வருஷத்திலிருந்து 88 ம் வருஷம் வரைக்கும் கமலுடன் சேர்ந்து வாழ்ந்த அவரது முதல் மனைவி, இப்போதும் கமல் குறித்து பேசுகிறார். அதே மாதிரி கமலும் அவரை பற்றி பேசுகிறார். ஆனால் எதுவுமே நல்ல மாதிரியாக இல்லை என்பதுதான் ஹையோடா!

கடந்த சில நாட்களுக்கு முன் கமல் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்தார். அப்போது ஸ்ருதி பிறந்த வருஷம் பற்றியும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த நேரம் நான் என் முதல் மனைவி வாணி கணபதிக்கு செட்டில் மென்ட் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். அதனால் பயங்கர கஷ்டம். ஆனால் பார்க்கிறவங்க எல்லாரும், பொண்ணு பொறந்திருக்கா. கோடி செல்வம் குவியப் போவுதுன்னு சொன்னாங்க என்று கூறியிருக்கிறார்.

அதற்கு வாணி கணபதி பதிலளித்திருக்கிறார். எப்படி? செம காட்டமாக! கமல் இப்படிதான் சிறுபிள்ளைத்தனமா பேசுவார். அப்போது எங்களுக்குன்னு சொந்தமா ஒரு வீடு கூட இல்லை. வாடகைக்கு அபார்ட்மென்ட் எடுத்து தங்கியிருந்தோம். சில நாட்கள் சாருஹாசன் வீட்ல கூட தங்கியிருக்கோம். அவர் சொல்வது மாதிரி எதுவும் நடக்கவில்லை. அவர் எப்பவுமே மற்றவர்கள் மீது குற்றம் சொல்லிட்டு தப்பிச்சுக்குவார். ஒரு பிரச்சனையை மையமா வச்சு சிம்பதி தேடிக்க முயல்வார். இப்போ மகள்களை வச்சு சிம்பதி தேடிக்க முயல்கிறார். வேறென்ன சொல்ல? என்று கேட்டிருக்கிறார்.

வருஷங்கள் எத்தனையானாலும், சில உறவுகள் பேச வைத்துக் கொண்டேயிருக்கும். அது நல்ல விதமாகவோ… அல்லது கெட்ட விதமாகவோ!

Read previous post:
ஒரு வருஷத்துக்கு உடம்பு வலிக்கும்? இது சஞ்சனா வச்ச ஸ்டெப்!

ரஜினியின் இடத்தை பிடிக்க போட்டி நடப்பதை போலவே, நமீதாவின் இடத்தை பிடிக்கவும் போட்டி நடந்து வருகிறது கோடம்பாக்கத்தில். ஐட்டம் டான்ஸ் ஆடுறவங்கள்லாம் நமீதா ஆகிட முடியாது. கொஞ்சமாவது...

Close