வனிதாவுக்கு நேர்ந்த கொடுமை

பொதுவாகவே கடல் சார்ந்த இடங்களில் படம் எடுப்பது என்பது சுனாமியை சொல்லாமலே அழைக்கிற அளவுக்கு கொடூரமானது. படப்பிடிப்பு குழுவினரை சுற்றி சூழ்ந்து கொள்ளும் மீனவ கிராமத்தினர், எங்களுக்கு இவ்வளவு கொடுத்தால்தான் இடத்தை விட்டு நகர விடுவோம் என்பார்கள். இன்னும் சிலர் ‘எங்க கிராமத்து கோவிலுக்கு நன்கொடை கொடு’ என்று படக்குழுவினரின் வேட்டியை உருவிவிட்டு அனுப்புவார்கள். இன்னும் சிலர் எங்க ஊர்க்காரங்களுக்கு மதிய சாப்பாடு தரலேன்னா ‘எதுக்குடா ஊருக்குள்ள வர்றீங்க?’ என்று கேரவேனை பிடித்துக் கொள்வார்கள்.

இத்தனைக்கும் முறையான அனுமதி வாங்கி படம் எடுக்க போகிறவர்களுக்குதான் இவ்வளவு தொந்தரவு. அனுமதியில்லாமல் போனால் அது அதைவிட பேராபத்து.

இவர்களையெல்லாம் மீறி படம் எடுப்பது கொடுமையிலும் கொடுமை. அப்படியொரு கொடுமை விஜயகுமாரின் மகள் வனிதாவுக்கும் ஏற்பட்டதாம். அவர் தயாரித்து வரும், ‘எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல்’ படத்தின் ஷுட்டிங்குக்குதான் முதல்நாளே இடைஞ்சல். இந்த படத்தை இயக்கிக் கொண்டிருப்பவர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட். வேறு வழியில்லாமல் சொல்ல வேண்டியவங்களிடம் சொல்லி கட்டுப்படுத்தினாராம் அவர்களை.

மற்றவங்களுக்கும் நிரந்தர தீர்வு எப்போ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜீவகாருண்ய பேரோளி அன்னை த்ரிஷா

அந்த நாயே நாலு சொட்டு கண்ணீர் வடிச்சு, த்ரிஷாவோட துப்பட்டாவுல துடைச்சுகிட்டாலும் ஆச்சர்யமில்ல. அப்படியொரு ஜீவகாருண்ய பேரொளியாக திகழ்ந்திருக்கிறார் த்ரிஷா. இந்த வருடம் தீபாவளி எப்படி என்று...

Close