பாலா பார்த்தா திட்டுவாரே..! பதறுகிறாராம் வரலட்சுமி
நல்லா வந்துச்சும்மா டாட்டூ கலாச்சாரம்! முன்னணி நடிகைகள் மட்டுமல்ல, பின்னணியேயில்லாத ‘சுமார் மூஞ்சு குமாரிகளும்’ கூட இந்த டாட்டூவில் மயங்கிக் கிடக்கிறார்கள். உள்ளங்காலில் மட்டும்தான் போடவில்லை. மற்றபடி உடம்பின் எல்லா பாகங்களிலும் இந்த டாட்டூ வந்து உட்கார்ந்து கொள்கிறது. இதற்கான ஸ்பெஷல் மையங்கள் சென்னையில் பல இடங்களில் இருந்தாலும், இதற்கு நுங்கம்பாக்கம்தான் ஃபேமஸ் என்கிறார்கள் திரையுலகத்தில். இங்குதான் முன்னணிகள் வந்து போகிறார்களாம். ரேட்? இதற்காகவே லட்சங்களை கொட்டுகிற நடிகைகளும் இருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், பெண்ணுக்கு பெண்ணே என்கிற நியதியெல்லாம் இங்கு இல்லை. டாட்டூ குத்துகிற கலையில் நன்கு தேர்ந்திருக்கும் ஆண்களும் படம் வரைகிறார்களாம். இவர்களிடம் வரைந்து கொள்ளவும் குவிகிறார்கள் இவர்கள்.
நயன்தாரா வரைந்து கொண்ட டாட்டூ ஒன்று அவர் விரும்பாமலே இன்னும் கையில் இருக்கிறது. அழிக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால்தான் ஆச்சாம். அதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார் அவர். குஷ்புவின் பின் கழுத்தோரம் அமைந்திருக்கிறது அழகான டாட்டூ. த்ரிஷாவுக்கு கழுத்துக்கு கீழே, நெஞ்சுக்கு மேலே லேசாக எட்டிப்பார்க்கிறது டாட்டூ. இப்படி பட்டும் படாமலும் வரையப்படுகிற டாட்டூக்கள் ஏக கவர்ச்சியாக இருப்பது வேறு விஷயம்.
இந்த டாட்டூ அழகில் கவரப்பட்டதால், இப்போது கவலைப்பட்டு நிற்கிறாராம் வரலட்சுமி. பாலா படத்தில் கரகாட்டக்காரியாக நடிக்கும் இவர் தனது கையில் பளிச்சென்று தெரிகிற இடத்தில் ஒரு டாட்டூவை வரைந்து வைத்திருக்கிறார். கதைப்படி கிராமத்து கரகாட்டக்காரி இவ்வளவு ஸ்டைலான டாட்டூவை வரைந்திருக்க முடியாதுதானே? பாலா கொந்தளிப்பதற்குள் அதை மறைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
சொல்ல முடியாது. நகரத்தில் அதன் பெயர் டாட்டூ. கிராமபுறங்களில் பாட்டியம்மாக்களெல்லாம் குத்திக் கொள்ளாத பச்சையா? பாலாவுக்கு தெரிந்தாலும் பிரச்சனையில்லை என்பதே இப்போதைய சமாதானம்!