என்னலே… ஒங்களுக்கு இதே வேலயா போச்சா? வரலட்சுமி எரிச்சல்!
சேது அபிதாவில் ஆரம்பித்து, பரதேசி வேதிகா வரைக்கும் பாலா படத்தில் ஹீரோயினாக நடித்தவர்களுக்கெல்லாம் என்ன வருமோ, அதுதான் வரலட்சுமிக்கும்! உள்ளதும் போச்சே நொள்ளக் கண்ணியாகி வெவ்வேறு லாங்குவேஜுக்கு போயாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று ஓடிவிடுவார்கள். ஆனால் அந்த கொடுப்பினையும் வரலட்சுமிக்கு இல்லை என்கிறது வரலாறு! மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் இவர் நடிக்கிறார் என்பதையே பெரிய செய்தியாக்கி வருகிறார்கள் சிலர். ஆனால் திலிப், துல்கர் சல்மான் என்று ஆசைப்படுகிற மனசுக்கு அது எவ்வளவு கொடுமையான சித்ரவதை என்பது நமக்கெங்கே தெரியும்? போகட்டும்… இப்போதும் அதே கேரளாவிலிருந்துதான் ஒரு மூட்டை எரிச்சலை வரலட்சுமிக்கு பார்சலாக அனுப்பி வைத்திருக்கிறார்கள் சேட்டன்கள்.
என்னவாம்?
கேரள முதல்வர் உம்மான் சாண்டியின் உறக்கத்தை கெடுத்து, அங்குள்ள இன்னும் சில மந்திரிகளின் ராத் தூக்கத்துக்கு சங்கு ஊதி, ஏகப்பட்ட அட்ராசிட்டி பண்ணிவரும் சரிதா நாயர் கதை தெரிந்தால் மேற்கொண்டு இந்த செய்தியை படிக்கலாம். இந்த சரிதா நாயர்தான் மேற்படி மந்திரிகள் மீதும், சபலிஸ்டுகள் மீதும், பாலியல் குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்திருக்கிறார்.
சரிதா நாயரின் ஓங்குதாங்கான உடல் கட்டுக்கு சரியாக பொருந்தி வருபவர் வரலட்சுமிதான் என்பதை ‘தாரை தப்பட்டை’ பார்த்து உறுதி செய்து கொண்ட கேரள இயக்குனர் ஒருவர், “சரிதா நாயர் கதையை படமா எடுக்குறேன். நீங்கதான் அந்த கேரக்டர்ல நடிக்கணும்” என்கிறாராம். அவருக்கு வரலட்சுமி சொன்ன பதில்தான் இந்த செய்தியின் தலைப்பு.
பாலா படத்தில் நடிச்சா வாழ்க்கையையே புரட்டிப் போட்ருவாருன்னு சொன்னாங்களே, அது இதுதானா கேரளா காம்ரேட்ஸ்?
இந்த செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க இங்கே க்ளிக் செய்யவும் https://youtu.be/lqivX6N45jA