வேதாளம் ஸ்பெஷல்5 – டெக்னிகல் புயலாக தெறி மாஸ் இன்டர்வெல்!
பொதுவாகவே அஜீத் படத்தில் டெக்னிக்கல் சமாச்சாரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிற இயக்குனர்கள் வரிசையில் ஷங்கர், எஸ்.எஸ்.ராஜமவுலி மாதிரி நமக்கும் ஒரு இடம் வேண்டும் என்று நினைக்காத இயக்குனர்களும் இருக்க முடியாது. ஆனால் அவரவர்களுக்கான ஆர்வத்தையும் பட்ஜெட்டையும் அதைதாண்டிய அறிவையும் பொருத்துதான் அமைகிறது அவையெல்லாம்.
தான் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவையெல்லாம் வெற்றிக் கணக்கில் இருப்பதால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற இயக்குனராக இருக்கிறார் சிறுத்தை சிவா. இந்த முறை வேதாளம் படத்தில் ஒரு சின்ன முயற்சியாக தொழில் நுட்ப விஷயங்களுக்குள்ளும் தலையை விட்டிருக்கிறாராம். இந்த படத்தின் இன்டர்வெல் ஒரு வியத்தகு ஆச்சர்யத்தையும் அனுபவத்தையும் ரசிகர்களுக்கு நிச்சயம் கொடுக்கும் என்கிறது வேதாளம் படத்தின் செவி வழிச் செய்திகள்.
அதுமட்டுமல்ல, அஜீத் வந்தால் போதும். நடந்தால் போதும். அதுவே ஒரு முழுப் பொங்கல் தீபாவளி கொண்டாடியதற்கு சமம் என்கிறது அவரது ரசிகர்கள் மனசு. ஆனால் இந்த படத்தில் அதையெல்லாம் தாண்டி மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம் அந்த இன்டர்வெல் காட்சியில். அதுவரை படம் போன போக்கை சடேர் ட்விஸ்ட் அடித்து வேறு திசையில் திருப்பிவிடக் கூடிய அந்த அட்டகாசமான இன்டர்வெல்லில் அஜீத்தின் நடிப்பை விஜய் ரசிகர்களே வியப்பார்கள் என்கிறது வேதாளம் தகவல்கள்!
வேதாளம் படத்தின் அந்த ஸ்மார்ட் இன்டர்வெல்லுக்காக இனி ஒவ்வொரு அஜீத் ரசிகர்களும் சொல்லிக் கொள்ளலாம், “ஐ ஆம் வெயிட்டிங்….”