டாப்லெஸ் ஆதரவாளர் வேலுபிரபாகரன் மீண்டும் பீப் காலத்தில்! இந்த படத்துல என்ன அட்ராசிடியோ?
ஒரு இயக்குனரின் காதல் டைரி! இதுதான் வேலு பிரபாகரனின் அடுத்த அதிரடி ஆர்ப்பாட்டம்!
ஒரு காலத்தில் பெரியார் திடலில் பேச்சுப்புலியாக திரிந்த வேலு பிரபாகரன், குட்டி பெரியாராகவே உருமாறி நாத்திகம் பேசியதை நாடே வியப்போடு நோக்கியது. மடை திறந்த வெள்ளம் போல பேசுவார். பொங்குவார். கர்ஜிப்பார். அவரது படங்களில் யாருக்கும் அஞ்சாத கருத்துக்கள் புயலென எட்டிப் பார்க்கும். புழுதி கிளப்பும். எல்லாம் ஒரு கட்டம் வரைக்கும்தான். அதற்கப்புறம் ‘வேலு பிரபாகரனின் காதல் அரங்கம்’ என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். படத்தில் கதை இருந்ததோ, இல்லையோ? நல்ல நாட்டுக்கட்டைகள் இருந்தன. அவர்களின் டாப்லெஸ்கள் இருந்தன. சென்சார் ஆபிசே மண்டை குழம்பி போகிற அளவுக்கு இஞ்சி கஷாயம் இடுப்பு லேகியம் எல்லாம் இருந்தது.
அந்த படம் சம்பந்தமான பிரஸ்மீட்டுகளில் எல்லாம், “ஏன் பெண்கள் மேலாடை அணிந்து மறைக்கணும்? அப்படியே ஆண்கள் மாதிரி திறந்து போட்டுட்டு போக வேண்டியதுதானே? மறைக்கறதாலதான் என்ன இருக்குன்னு எட்டிப்பார்க்குறான். திறந்து கிடந்தா எவன் பார்க்கப் போறான்?” என்றெல்லாம் கருத்துக்களை வெளியிட்டு, கலவரத்தை தூண்டினார். அந்த படத்தை தயாரித்தது இவர் என்றாலும் வெளிட்டது வேறொருவர். வாங்கியவருக்கு செம லாபம். விற்றவருக்கு நாலு முழம் வேட்டி கூட தேறவில்லை.
காலம் ஓடியது. அவரே வெட்கப்படுகிற அளவுக்கு இது பீப் காலம் ஆகிவிட்டது. இப்போதும் பழைய வேகத்தோடு வரவில்லை என்றால், பார்ப்பவர்கள்தான் என்ன நினைப்பார்கள்? வந்தேவிட்டார். இந்த முறை அவர் இயக்கியிருக்கும் படம்தான் ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’.
நடுவில் இவரை ஜனங்கள் மறக்கும் போதெல்லாம், “சில்க் ஸ்மிதா என்னோட காதலி தெரியுமா? என்னை அவ எப்படி லவ் பண்ணினா தெரியுமா?” என்றெல்லாம் பிளாஷ்பேக்கை ஓப்பன் பண்ணி, “ஒருவேளை இதெல்லாம் உண்மையா இருக்குமோ?” என்று ஜனங்களை குழப்பி விடுவார். இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்தால், இது வேலுபிரபாகரனின் டைரியாக இருக்குமோ என்றுதான் தோன்றுகிறது.
குறை வைக்காம முறை வைக்கறதுல பி.எச்.டி வாங்குன வேலு பிரபாகரனின் இந்த படத்தையும் பார்க்க ஆவலா காத்திருக்கோம். வாங்க சில்க் மணாளரே!