வெங்கட் பிரபுவின் ரகசிய படம்! யாரும் படம் கொடுக்காததால் வந்த விரக்தியா?
ஒரு காலத்தில் அஜீத் வா… வா… என்று அழைக்க, இன்னொரு பக்கம் சூர்யா வா… வா… என்று அழைக்க, இதென்னடா வெங்கட் பிரபுவுக்கு வந்த வாழ்வு என்று வயிறார எரிச்சல் பட்டது ஊர் உலகம்! ஊரு கண்ணு… ஒறவு கண்ணு… எல்லாம் சேர்ந்து வெங்கட்பிரபுவின் ஸ்டார் கால கனவை பொசுக்கிவிட, மனுஷன் இப்போ யாருக்கும் தெரியாமல் ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இது குறுகிய கால படம் என்பது ஒரு புறம்…. பட்ஜெட்டை பொறுத்தவரை சரவணா ஸ்டோரை விட நொறுக்கப்பட்ட ஆடித்தள்ளுபடி ரேஞ்சுக்கு இருப்பது இன்னொரு புறம்… இதனால், அதையும் வெளியில் சொல்ல முடியாத சங்கடம்.
இப்படி திரும்புன இடமெல்லாம் முட்டு சந்தாக இருந்தாலும், இதையாவது உருப்படியாக எடுத்து ஊரறிய வெற்றி கண்டு, மீண்டும் ஸ்டார்களின் மனசில் இடம் பிடிக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறாராம் வெங்கட்பிரபு. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பது ஹன்சிகா மோத்வானி.
அநேகமாக இது பேய் படமாக இருக்கக் கூடும். அதில் பேயாக ஹன்சிகாவே நடிக்கக் கூடும் என்றெல்லாம் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
செட் பிராப்பர்ட்டியான தம்பி பிரேம்ஜியும் இருப்பாரே?