காக்கா முட்டை இயக்குனருக்கு குவியும் பாராட்டுகள்! எரிச்சலில் வெற்றிமாறன்?

அண்மையில் திரைக்கு வந்து தியேட்டர்களை கொண்டாட வைத்திருக்கும் படம் ‘காக்கா முட்டை’. யாரும் எதிர்பாராத விதமாக இந்த படத்தைக் காண கொத்து கொத்தாக தியேட்டருக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். கைதட்டல்களும் விசிலும் பறக்கிறது. பொதுவாக அவார்டு திரைப்படங்களை தியேட்டர்களில் யாரும் சீண்டுவதேயில்லை. அந்த பெருமை முதன் முறையாக காக்கா முட்டைக்குதான்! இந்த படத்தை இயக்கிய மணிகண்டனுக்கும், படத்தை தயாரித்த இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் இருவருக்கும் கூட பாராட்டுகளை குவித்துக் கொண்டிருக்கிறது மீடியா. இந்த நிலையில்தான் அந்த ஷாக்.

அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஒன்று காக்கா முட்டை படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் டெக்னீஷியன்களை அழைத்து பேட்டி காண முற்பட்டது. தொகுப்பாளினிக்கு எழுதித் தரப்படும் ஸ்கிரிப்டில் இவ்வாறு எழுதப்பட்டிருந்ததாம். ‘உலகப்புகழ் பெற்ற ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ போன்ற படங்களின் வரிசையில் கொண்டாடப்பட வேண்டிய படம் இது. உலகம் முழுக்க ஏழ்மையின் பிரதிபலிப்பை எதார்த்தத்தோடு சொன்ன படங்கள் மிக மிக குறைவுதான். அதில் நிறைவான படம் காக்கா முட்டை என்று வஞ்சகமில்லாமல் பாராட்டியதாம் அந்த ஸ்கிரிப்ட்!

தொகுப்பாளினி அதை படிக்கும் முன்பாகவே தடுத்துவிட்டாராம் வெற்றிமாறன். ‘நீங்க பைசைக்கிள் தீவ்ஸ் படத்தோட சேர்த்து பேசுற அளவுக்கெல்லாம் பெரிய படம் இல்ல இது. நீங்க சாதாரணமாகவே இந்த டைரக்டரை அறிமுகப்படுத்தலாம்’ என்றாராம். ஒரு இயக்குனரை வைத்துக் கொண்டே இன்னொரு இயக்குனருக்கு சந்தனம் பூசினால், மனசு தாங்குமா?

பொற்ற்ற்ற்ற்றா….மை!

1 Comment
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    ஏன் இந்தக் கொலவெறி அந்து?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காக்கா முட்டை – விமர்சனம்

இடது கையில உட்கார்ந்திருக்கிற கொசுவை வலது கை வந்து அடிப்பதற்குள் சம்பந்தப்பட்ட கொசு, அதே ஸ்பாட்டில் ஏழெட்டு முட்டைகள் விட்டு குஞ்சு பொறித்திருந்தால், அதுதான் நாம் இத்தனை...

Close