வெற்றிமாறன் பாராட்டிய வளரும் ஹீரோ!
வளரும் ஹீரோவை வளர்ந்த ஹீரோக்கள் வாழ்த்துவதை விட பெரிய கொடுப்பினை வாகை சூடிய இயக்குனர்கள் தங்கள் வாயால் வாழ்த்துவதுதான். அரிது அரிது படத்தில் அறிமுகமாகி, சிந்து சமவெளி படத்தின் மூலம் லேசாக எட்டிப்பார்த்து, எஸ்.ஏ.சி யின் சட்டம் ஒரு இருட்டறையில் வெளிச்சம் காட்டி, இன்று பொறியாளன் வரைக்கும் வளர்ந்திருக்கிற ஹரீஷூக்கு இந்த படம்தான் பில்டிங் கட்டி, பிரமாண்டப்படுத்தும் போலிருக்கிறது.
இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் ஹரீஷை ஆசிர்வதிப்பதை போல இந்த வார குங்குமம் இதழில் சில வார்த்தைகளை கூறியிருக்கிறார். அந்த வார்த்தைகள் அப்படியே இங்கே-