நாம ஒண்ணு சொன்னா அவிங்க ஒண்ணு நினைப்பாங்க! தெறி- உஷார்- விஜய்?

சாதாரண ஒரு டீசருக்கே, தெறிக்கவிட்டுவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். அதற்கப்புறம் தெறி படம் தொடர்பாக எது வந்தாலும் விஜய் ரசிகர்கள் வெறி கொண்டு அவற்றை ஷேர் பண்ணிக் கொண்டிருக்க, உள்ளுக்குள் “படம் எப்போ வரும் தலைவா?’ என்ற குரல் மட்டும் ஓயவேயில்லை அவர்களுக்கு. பிற்சேர்ப்பு பணிகள்தான் பாக்கி. மீதி கிணறை சர்வ சாதாரணமாக தாண்டிவிட்டது அட்லி அண்டு குரூப். அதையும் முழு மூச்சாக முடித்துவிட்டால், மே 1ந் தேதியே கூட தெறி திரைக்கு வந்துவிடலாம். ஆனால்…? என்னய்யா ஆனால்?

“படம் தேர்தல் ரிசல்ட்டுக்கு பின் வரட்டுமே” என்கிறாராம் விஜய். ஏன்? இந்த படத்தை பொறுத்தவரை விஜய் அஞ்சுகிற அளவுக்கு சிறு பிசிறு கூட இல்லையாம். அரசியல் தொடர்பான பஞ்ச் வசனங்கள் எதுவும் இல்லையாம். ஆனாலும், “நான் கதைக்கு தொடர்பாக எதையாவது பேசுவேன். ஆனா கேட்கிறவங்களுக்கு வேற மாதிரி தோணும். எதையாவது கிளப்பி விடுவாங்க. இந்த பிரச்சனைகள் எதற்கும் இடம் கொடுக்க வேண்டாம். படத்தை நிதானமா தேர்தல் முடிவுக்கு பிறகு வரவழைச்சுக்கலாம்” என்று கூறியிருக்கிறாராம்.

காதலிப்பவர்களுக்குதான் தெரியும், காத்திருப்பின் சுகம். விஜய் ரசிகர்களுக்கும் அந்த தவிப்பு இருக்கும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கார்த்திக் சுப்புராஜ்… இப்படி செய்யலாமா சொல்லுங்க?

குறும்பட இயக்குனர்களுக்கெல்லாம் குரு சாமியாக விளங்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். அவர் இயக்கிய ஜிகிர்தண்டா மட்டும், தண்ட லிஸ்ட்டில் சேர்ந்திருந்தால் அதற்கப்புறம் ஒரு குறும்பட இயக்குனரையும் கூட நம்பி...

Close