சிரிச்சுகிட்டே நோ சொல்லு… விஜய்… அப்புறம் ஜீவா!

அதென்னவோ தெரியவில்லை, ‘தம்பி’ என்ற உணர்வுபூர்வமான படத்தை இயக்கிய சீமானுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஹீரோக்கள். அவர் உணர்வு பூர்வமாக எல்லாவற்றையும் அணுகுகிற அரசியல்வாதி. அவருக்கு இனிமேல் சினிமா சரிப்படாது என்று இவர்களே முடிவெடுத்துவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை. பகலவன் கதையை விஜய்யிடம் சொல்லி, அவரும் நடிப்பதாக ஒப்புதல் கொடுத்து… அதையும் பிரமாண்ட தயாரிப்பாளர் தாணு தயாரிப்பதாக இருந்து… அதற்கப்புறம் நடந்த கதைதான் உங்களுக்கு தெரியுமே?

இருந்தாலும் விஜய்க்கு கத்தி பிரச்சனை வந்த போது எவ்வித மனக்கசப்புக்கும் இடமில்லாமல் அப்போதைய எதிர்ப்புகளுக்கு எதிர் சவால் விட்டு விஜய்யை காப்பாற்றினார் சீமான். அந்த சமயத்தில் இவர் தோள் கொடுத்த காரணத்திற்காக தாமே முன் வந்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை சீமானுக்கு தருவதாக ஒப்புக் கொண்டதாம் ஐங்கரன் நிறுவனம். உடனே ஜீவாவிடம் கதை சொல்லப்பட்டது. ‘நான் இந்த கதையில் நடிக்க தயாரா இருக்கேன். அண்ணன் எப்ப சொன்னாலும் என் கால்ஷீட் உறுதி’ என்றெல்லாம் கூறிய ஜீவா சேட், அதற்கப்புறம் நாட்கள் நகர நகர இவரும் படத்தை விட்டு, கதையை விட்டு, சீமானை விட்டு வெகு தூரம் நகர்ந்துவிட்டார்.

இப்போது கால்ஷீட் கேட்டு சென்ற சீமானுக்கு ஜீவா, அண்ணே… நான் இப்போதைக்கு உங்களுக்கு கால்ஷீட் தர முடியாது. இன்னும் சில பல வருஷங்கள் ஆகும் என்றாராம். இந்த சில பல வருஷங்கள் என்பது குறைந்தது பத்திலிருந்து பதினைந்து என்பதை புரிந்து கொண்ட சீமான், அதுக்கென்ன தம்பி. நல்லாயிருங்க என்று கூறிவிட்டதாக தகவல். தமிழ்நாட்ல, தமிழனோட மான அவமானத்தை திரையில் காட்ட முன் வருகிற ஒரு தமிழனுக்கு கால்ஷீட் கொடுக்க ஒரு தமிழன் கூட இல்லையா? என்னய்யா வேடிக்கை இது?

Read previous post:
தொழிலாளர்களுக்கு ஜெயில்? கண்டுகொள்ளவாரா ஏ.ஆர்.முருகதாஸ்?!

பரங்கிக்காய் விழுந்து சுண்டைக்காய் நசுங்கிய மாதிரிதான் தொழிலாளர்களின் வாழ்க்கை. அதுவும் ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரியான பெரிய பரங்கிக்காய்கள் விழுந்தால், ஐயோ பாவம்... இவர்கள்தான் என்ன செய்வார்கள்? விஷயம் ரொம்ப...

Close