மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவுக்கு நன்றி விஜய் பரபரப்பு அறிக்கை!
நாளை கத்தி ரிலீஸ். ஆனால் இந்த நிமிடம் வரை பதற்றம் ஓயவில்லை. கத்தியை வெளியிடும் தியேட்டர்கள் தாக்கப்பட்டதையடுத்து அவசர கூட்டம் போட்டிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும். சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு விரைந்துள்ள ஐங்கரன் கருணா, கத்தி ஓடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருக்கிறார்.
தியேட்டர்களுக்கு பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் படத்தை எப்படி திரையிடுவது என்று குழம்பி போயிருக்கும் தியேட்டர்காரர்கள் சுணக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஜெயலலிதாவுக்கும் லைக்கா பெயரை நீக்க சம்மதித்த தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் விஜய். அந்த அறிக்கை கீழே வருமாறு-
அதற்கிடையில் இன்னொரு முக்கியமான விஷயம். நேற்று இரவு கத்தி எதிர்ப்பாளர்களுடன் சமரசம் ஆகிவிட்டதாக கூறப்பட்டாலும், தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்னும் சமாதானம் ஏற்படவில்லை. சமாதானம் ஏற்பட்டுவிட்டதாக லைக்கா நிறுவனம் பொய் தகவல் பரப்புவதாக ஆத்திரப்பட்டிருக்கிறார்.
மழை விட்டுவிட்டது. நனைந்த சட்டையைதான் மேலும் நனைத்துக் கொண்டிருக்கிறது அழுகாச்சி!