ஷங்கரின் பர்த் டே பார்ட்டியில் விஜய்! கைவிடப்பட்ட எந்திரன் 2 EXCLUSIVE தகவல்கள்…

டைரக்டர் ஷங்கரின் நட்பு வளையத்திற்குள் வருவதென்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் ரிங் மாஸ்டர்தான். ஆனால், சவுக்குக்கு பதிலாக அதில் பூச்சரத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படிதான் மென்மையாக பழகுவார். படப்பிடிப்பில் தாம் தும் கூச்சல் இல்லாத டாப் இயக்குனர் ஒரே ஒருவர் என்றால் அது ஷங்கர்தான். அப்படிப்பட்டவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு பார்ட்டி கொடுக்கிறார் என்றால், ஆஞ்சநேயர் கோவில் சுண்டல் கடலை மாதிரி அள்ளி அள்ளியா கொடுப்பார்? அவரது மனசுக்கும் தொழிலுக்கும் நெருக்கமானவர்கள் மட்டும் வந்திருந்தார்களாம் பார்ட்டிக்கு. முக்கியமாக விக்ரமும், ஐ படத்திற்கு சம்பந்தமேயில்லாத விஜய்யும்.

‘நண்பன்’ படத்திற்கு பிறகு விஜய்யும் ஷங்கரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய வேண்டும். அது ஆக்ஷன் படமாக இருக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் அங்கபிரதட்ஷணம் செய்யாத குறைதான். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அமையவே இல்லை. ஷங்கரும் எந்திரன் பார்ட் 2 எடுக்க முடிவு செய்து அதில் ரஜினியை நடிக்க கேட்டு வருவதாக தகவல். தற்போது இருக்கிற உடல் நிலையை கருத்தில் கொண்ட ரஜினி, இதற்கான பதிலை தள்ளி தள்ளி போட்டு வருகிறார். அஜீத் நடிப்பதாகவும் ஒரு தகவல் கிளம்ப, அதையும் அழுத்தமாக மறுத்திருக்கிறார் ஷங்கர். இந்த நிலையில்தான் எந்திரன் 2 வில் விஜய்யை நடிக்க வைக்கும் முயற்சியாக இந்த பார்ட்டியை கருதலாமா என்ற கேள்வி எழுந்தது திரையுலத்தில்.

விசாரித்தால் அதுவும் இல்லையாம். எந்திரன் பார்ட் 2 என்கிற திட்டத்தையே இப்போதைக்கு கையில் எடுக்கப் போவதில்லையாம் ஷங்கர். வேறொரு கதையை தீவிரமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறாராம். அதற்கான டிஸ்கஷன் வேலைகளும் இப்பவே துவங்கிவிட்டதாக கேள்வி. அந்த புதிய படத்தில் விஜய் நடிக்கக் கூடும் என்கிறது புதிய தகவல்கள்.

Read previous post:
கடும் சிக்கலில் கத்தி, புலிப்பார்வை… ஒன்று திரண்ட 65 தலைவர்கள்

சர்ச்சைக்குரிய புலிப் பார்வை மற்றும் கத்தி திரைப்படங்களை வெளியிடக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ,...

Close