சற்று முன்- விஜய்யிடமிருந்து அழைப்பு! திக்கு முக்காடிய இயக்குனர்!

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையாக என்பார்கள் கிராமபுறங்களில்! பல வருஷமாக விஜய் அழைப்பாரா என்று காத்துக்கிடக்கும் முன்னணி இயக்குனர்களுக்கு கூட இந்த செய்தி வியப்பாக இருக்கும். அல்லது அதிர்ச்சியாக இருக்கும். யெஸ்… சற்று முன் நடந்த ஆச்சர்யம் இது.

றெக்க படத்தின் இயக்குனர் ரத்ன சிவாவுக்கு ஒரு நம்பரில் இருந்து அழைப்பு. வழக்கம் போல றெக்க படத்தை பாராட்டியோ, விமர்சித்தோ யாரோ பேசப்போகிறார்கள் என்று நினைத்தவருக்கு பேரதிர்ச்சி. எதிர்முனையில் விஜய்யின் மேனேஜர். “சார்… உங்களை பார்க்கணும்னு சொன்னாங்க. உங்களால் இப்போ வர முடியுமா?” என்றாராம். அதற்கப்புறம் மரியாதை நிமித்தமாக விஜய்யும் அழைக்க, மூச்சிரைப்பது மூணாம் மனுஷனுக்கு தெரியாமல், விஜய் சொன்ன இடத்தில் ஆஜராகிவிட்டார் ரத்ன சிவா.

ரத்ன சுருக்கமாக இல்லாமல் சற்று விரிவாகவே நேரம் கொடுத்து கதை கேட்டிருக்கிறார் விஜய். முழு கதையையும் கேட்டவர், நம்பிக்கையோடு அனுப்பி வைத்தாராம். இன்னும் சில தினங்களில் நல்ல செய்தி வந்தால், அதற்கு றெக்க படத்தை பற்றி பி அண்டு சி ரிசல்ட்டும் ஒரு காரணமாக இருக்கும் என்பதில் துளி சந்தேகம் இல்லை!

பட்டத்து யானை விட்டத்தை பார்த்து தும்மினாலும் பூமி அதிரும்ல? கோடம்பாக்கமே அதிர்ந்து போய் கிடக்கிறது!

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஒரு கோடிக்காக விஜய் சேதுபதியின் காலை வாரிய ஹீரோ!

யாருய்யா அவ்ளோ பெரிய பிஸ்கோத்து? என்று ஆவல் வருகிறதல்லவா! வேறு யாருமல்ல... நம்ம

Close