விஜய் எடுத்த திடீர் முடிவால் ஏ.ஆர்.முருகதாஸ் அதிர்ச்சி!

துப்பாக்கி, கத்தி என்று விஜய்யும், ஏ.ஆர்.முருகதாசும் இணைகிற படங்கள் எல்லாம் ச்சும்மா ஆட்டோ மீட்டர் வேகத்தில் விறுவிறுப்பு காட்டியதை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அவர்களை துளி கூட ஏமாற்றாத வகையில் கமர்ஷியல் மாஸ் காட்டி வரும் முருகதாசை மற்றவர்களை விட ஒரு படி உயரத்தில் வைத்துதான் பார்க்கிறார் விஜய். ஆனால் கத்தி படத்திற்கு பின், மீண்டும் அஜீத்துடன் ஒரு படத்தை இயக்கிவிட வேண்டும் என்று துடித்த முருதாசுக்கு, முருங்கைக் கீரையின் முனை கூட வாய்க்கவில்லை.

மறுபடியும் விஜய் கூடாரத்திலேயே தஞ்சமடைந்த முருகதாஸ், தான் அஜீத் கூடாரத்தில் புறக்கணிக்கப்பட்ட வலியை சுமந்ததாலோ என்னவோ, இன்னும் இன்னும் என்று திரைக்கதையை மெருகேற்கிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறை கதை செதுக்கப்பட்டு திருப்தியா இருக்கு என்று நம்பும்போதெல்லாம், மீண்டும் திருத்தப்பட்ட பகுதிகளை விஜய்யிடம் கன்வே செய்கிற வழக்கமும் இருக்கிறது முருகதாசுக்கு.

இந்த நிலையில்தான் 2017 ல் உங்களுக்கு கால்ஷீட் இல்லை. 2018 ல்தான் என்று கூறியிருக்கிறாராம் விஜய். இது திரைக்கதையை இன்னும் செதுக்குவதற்கான நேரமா? அல்லது ஹரிக்காவோ, மோகன் ராஜாவுக்காகவோ 2017 ஐ ஒதுக்கி வைத்திருக்கிறாரா? எதுவும் புரியவில்லை ரசிகர்களுக்கு. ஆனால் விஜய் எடுக்கிற முடிவு எப்போதும் வெற்றியை நோக்கியே இருப்பதால், கண்ணை மூடிக் கொண்டு வரவேற்றுவிட வேண்டியதுதான்!

ஒரு முக்கியமான குறிப்பு- விஜய் ஏஆர்.முருகதாஸ் இணையும் படத்தை சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்பது காதுவழி செய்தி!

Read previous post:
சசிகலாவுக்கு தண்டனை! வளர்மதி ரேஞ்சுக்கு இறங்கி அடித்த கமல்!

Close