தலைவா… பிளேடால கீச்சிப்பேன்…கீச்சி!

சமீபத்தில் ‘சத்யம்’ திரையரங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக வந்திருந்தார் சதுரங்க வேட்டை நட்ராஜ். இவர் பெயரை சொல்லும் போதெல்லாம் கூட்டம் ஆர்ப்பரித்தது. இவர் பேச எழுந்தால் பயங்கர கைத்தட்டல்! ஒரு கேமிராமேன் ஹீரோவாக நடிப்பதையே பொறுத்துக் கொள்ள முடியாத தொழில் முறை ஹீரோக்களால். இவர் சதுரங்க வேட்டை மூலம் வெற்றிப்பட ஹீரோவானதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அதுவும், இப்படி பொது நிகழ்ச்சிகளில் மொத்த கைத்தட்டல்களையும் அள்ளிக் கொண்டு போனால் பொறுக்குமா? முகத்தை சிரிப்பது போல வைத்துக் கொண்டாலும் அகத்தின் அழகில் க்ரீஸ் ஒட்டியிருப்பதை கண்கூடாக காண முடிந்தது அப்போது. (யாரந்த ஹீரோன்னு சொல்ல மாட்டமே!)

கட்…! இப்போது விஜய் நடிக்கும் படத்திற்கு நட்ராஜ்தான் ஒளிப்பதிவு. படத்தில் ஸ்ரீதேவியும் முக்கிய ரோலில் நடிக்கிறார் அல்லவா? ஷுட்டிங் ஸ்பாட்டில் நட்ராஜை பார்த்ததும், உங்களுடைய படம் செம ஹிட்டாமே என்றாராம். விஜய் படம் என்றால் ஏகப்பட்ட சுவாரஸ்யம் இருக்குமே? நட்ராஜ் என்ன சொல்கிறார். படத்தை பற்றி? ‘சொல்லவே கூடாது. ஏன்னா எனக்கு சொல்லப்பட்ட முதல் விஷயமே, படம் தொடர்பான எந்த விஷயமும் வெளியில் போயிர வேண்டாம்ங்கறதுதான். ஆனால் ஒரு விஷயத்தில் வியப்பு’.

‘ஒரு நாள் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் வந்துட்டாங்க. எல்லாருக்கும் விஜய் கூட நின்னு போட்டோ எடுத்துக்கணும்னு ஆசை. ஒரு பையன், ‘தலைவா… நீ போட்டோ எடுத்துக்க விடலேன்னா கைய பிளேடா அறுத்துப்பேன்’றான். பதறிப்போன விஜய், ‘போட்டோதானே… வாங்க’ன்னு கூப்பிட்டு ஒவ்வொருத்தர் கூடவும் சிரிச்ச முகத்தோட எடுத்துகிட்டார். கிட்டதட்ட மூணு மணி நேரம்… எப்படிதான் ஒரே இடத்துல நின்னு சிரிச்சிகிட்டே இப்படியெல்லாம் எடுத்துக்க முடியுதோ? கிரேட்’ என்றார்.

மூணு மணி நேரம் ஷுட்டிங் நின்னு போச்சுங்கறதை எவ்வளவு நாகரீமா சொல்றாரு நட்டி? நீங்கதான் கிரேட் தலைவா!

Read previous post:
Nannbenda – Nee Sun Song Teaser

http://youtu.be/MRIinx_zjUg

Close