மரத்த சாய்ச்சாரு… இப்ப வேரையும் புடுங்கிட்டாரு விஜய்! சிம்பு பேமிலிக்கு அடுக்கடுக்கான உதவி?
நான் அஜீத் ரசிகன் என்ற பெருமையோடு திரிந்த சிம்பு, இப்போது விஜய்யிடம் அடி வேர் வரைக்கும் சரணாகதியாகிவிட வேண்டியதுதான் போலிருக்கிறது. வாலு விஷயத்தில் சிம்புவின் மனசுக்கு நெருக்கமாகிக் கொண்டே வந்த விஜய், இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் தனது புலி படத்தின் விநியோக உரிமை விஷயத்திலும் டிஆருக்கு சாதகம் செய்திருக்கிறார். இந்த கூட்டணி இவ்வளவு வலுவாக நீண்டு கொண்டே போகிறதே, அதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று தோண்டி துருவ ஆரம்பித்திருக்கிறது பலரது கண்கள்.
புலி படத்தின் திருநெல்வேலி, மற்றும் சேலம் பகுதி விநியோகஸ்தராக டி.ராஜேந்தரே இருக்கட்டும் என்று கூறியிருக்கிறாராம் விஜய். பொதுவாக தனது படங்களுக்கென்று ரெகுலர் விநியோகஸ்தர்கள் வைத்திருக்கும் வழக்கமுடைய விஜய், நடுவில் ஒருவரை புதிதாக நுழைப்பது பழையவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். நல்லா சம்பாதிக்கிற நேரத்துல இப்படி பண்றாரே என்கிற ஆத்திரத்தையும் கொடுக்கும். அதையெல்லாம் மீறி இந்த வேலையை விஜய் செய்வது ஏனென்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் டி.ராஜேந்தர் ஒரு காலத்தில் புகழ் பெற்ற விநியோகஸ்தராக இருந்தவர். சில காலம் அதிலிருந்து ஒதுங்கியிருந்தவரை மீண்டும் விநியோகஸ்தர் ஆக்கியிருக்கிறார் விஜய்.
இப்படி மாய்ந்து மாய்ந்து தனது பேமிலிக்கு விஜய் உதவி வருவதால், இனி எதிர்காலத்தில் அஜீத் பற்றி வாயே திறக்காமல் போவார் சிம்பு என்கிறார்கள். அதுதானே விஜய்க்கும் வேண்டும்!
பின்குறிப்பு- இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த டிஆர், வாலு தொடர்பான எல்லா பஞ்சாயத்துகளும் முடிந்துவிட்டதாகவும், படம் 14 ந் தேதி ரிலீஸ் என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். கூட்டு பிரார்த்தனை செய்தாவது வாலுவை வரவழைத்துவிடவேண்டும். இல்லையென்றால்… தமிழனின் நிம்மதி காலி!