விஜய்யின் நீலக்கண் பரம்பரை ? இது புலி பட ரகசியம்!

புலி படம் குறித்த சின்னஞ்சிறு செய்திகளை கூட மிக மிக ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமாச்சாரத்தையே கூட தடபுடலாக நாள் நட்சத்திரம் பார்த்துதான் ரிலீஸ் செய்யலாம் என்று இருந்தார்களாம். பட்…? கைமீறி விட்டது அந்த விஷயம். ஆனால் படம் குறித்த எந்த செய்தியும் வெளியே கசிந்துவிடக் கூடாது என்று சிம்புதேவன் தரப்பு கடும் சட்டதிட்ட தடுப்பணை கட்டியிருந்தாலும், அதையும் மீறி கதையே கசிந்துவிட்டது. அதற்கு முன்பே டீஸர் கசிந்தது. அப்புறம் புகைப்படம் கசிந்தது. இப்படி கசிகிற இடத்திலெல்லாம் கட்டி சுண்ணாம்பை தடவி வருகிற சிம்புதேவனுக்கு அடுத்தும் ஒரு அலர்ட் நியூஸ்.

படத்தில் விஜய்க்கும் ஸ்ரீதேவிக்கும் என்ன ரிலேஷன் ஷிப்? என்றொரு சிறு குறு தகவல் காற்று வாக்கில் கசிந்திருக்கிறது. அதுதான் அந்த நீலக்கண் மேட்டர். அட… அது என்னய்யா?

500 வருடங்களுக்கு முந்தைய அரசி ஸ்ரீதேவியும், 500 வருடத்திற்கு பிந்தைய லோக்கல் விஜய்யும் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பின் போது நீ நம்மாளு… என்று ஸ்ரீதேவி மனம் மகிழ்கிறார். ஏன்? ஸ்ரீதேவிக்கும் நீலக்கண். விஜய்க்கும் நீலக்கண். அவர்கள் பரம்பரைக்கே நீலக்கண் இருக்குமாம். அப்படி என் பரம்பரையில் வந்தவன் நீ என்று ஸ்ரீதேவி உறவு கொண்டாட பயன்படுகிறது விஜய்யின் நீலக்கண்கள். இதற்காக அவரது கண்களில் ஸ்பெஷல் லென்ஸ் பொருத்தப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டதாம்.

வழக்கம் போல இந்த செய்தியை புலி வட்டாரம் மறுக்கும் என்றாலும் கசிந்ததை சொல்ல வேண்டியது நம் கடமையாச்சே?

Read previous post:
பாபி சிம்ஹா நடிகை ரேஷ்மி காதல்! நவம்பரில் திருமணம்?

ஐயோ பாவம் சினிமாக்காரர்கள்... வந்த தும்மலை கூட சுதந்திரமாக தும்மிவிட முடியாது. அந்த தும்மலுக்குள் மார்க்கெட் இருக்கும். சம்பளம் இருக்கும். பிரஸ்டீஜ் இருக்கும். இன்னும் என்னென்னவோ இருக்கும்....

Close