ஓங்கி அடிச்சா ஐம்பது டன் வெயிட்றா… மீண்டும் காக்கி சட்டை மாட்டுகிறார் விஜய்?

விஜய்யின் அகலமான தோள்களும், ஆளை துளைக்கும் கண்களும் போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு பொருத்தமோ பொருத்தம். இருந்தாலும், ‘சிங்கம் தனியாகவே உலவட்டும்…’ என்று சூர்யா வழியில் க்ராஸ் செய்யாமலே இருந்தார். அவர் போலீஸ் யூனிபாஃர்ம் போட்டும் சில வருடங்கள் ஆச்சு. இந்த நிலையில் ‘ஓங்கி அடிங்க சார்… ஒன்றரை டன் போதாது. இன்னும் 100 டன் கூட ஏத்துவோம்’ என்று ஒரு கதையுடன் போய் அவரை டிஸ்டிரப் பண்ணிவிட்டு வந்துவிட்டார் அட்லீ.

‘ராஜா ராணி’ என்ற சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த அட்லீ அதற்கப்புறம் படம் இயக்க எடுத்துக் கொண்ட நாட்களில் சிந்துபாத், லைலாவையே கூட கண்டு பிடித்திருக்கலாம். இத்தனைக்கும் அந்த படத்தை பாராட்டாத ஹீரோக்களே இல்லை. கதை கேட்கவும் கால்ஷீட் கொடுக்கவும் தானாகவே பலர் முன் வந்தாலும், அட்லீ வச்ச குறி ஆல் இண்டியாவே திருப்பி பார்க்கிற ஆணியோட கூர்ர்ர்ர்ர்…! எப்படியோ விஜய்யை மீட் பண்ணி ஒரு கதையை சொல்லிவிட்டார்.

பொதுவாக ஒரு கதையை கேட்டுவிட்டு அதில் நடிக்க ஓராயிரம் முறை யோசித்து அதற்கப்புறம் பதில் சொல்வார் விஜய். இந்த முறை அட்லீயிடம் ‘நாம் சேர்ந்து படம் பண்றோம். ஆக வேண்டிய வேலையை உடனே முடுக்கி விடுங்க’ என்றும் கூறியிருக்கிறார். இவ்வளவு பர்சென்ட் பக்க பலத்தோடு கிளம்பிய அட்லீயும் இப்போது வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்டிருக்கிறாராம். நடுவில் சிம்பு தேவன் சொல்லிய இன்னொரு கதையும் விஜய்யை டிஸ்டிரப் பண்ண, யாருக்கு முதல் சாய்ஸ் என்பதுதான் இப்போதைய விறுவிறு என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

நடுவில் ஜில்லா பட இயக்குனர் நேசனும் அவ்வப்போது விஜய்யை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த மும்முனை போட்டியில் எம்முனை கூர் முனை என்பதை விஜய்தான் தீர்மானிக்க வேண்டும். ரசிகர்களுக்கு தேவை காக்கியா, அல்லது காதலா? விஜய்க்குதான் ஒரு ஆலோசனையை அள்ளி விடுங்களேன் ரசிகர்களே…!

1 Comment
  1. Prakash says

    // விஜய்யின் அகலமான தோள்களும், ஆளை துளைக்கும் கண்களும் போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு பொருத்தமோ பொருத்தம். //

    ஏன் சார் நீங்க ஜில்லா படம் பார்க்கலையா !

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நான் ஏன் மதம் மாறினேன்…? மனம் திறந்தார் யுவன்சங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிய விஷயத்தை அவரே அறிவிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே எழுதிய ஒரே இணையதளம் நமது நியூதமிழ்சினிமா.காம்தான். அவர் ஏன்...

Close