ரஜினி இடத்தில் விஜய்! சவாலை சமாளிப்பாரா?

முதல் நாள் இட்லியை மறுநாள் உப்புமாவாக்குவதில் நம்ம சினிமாக்காரர்களுக்கு அப்படியென்னதான் திருப்தியோ? இதற்கு முன்பு வந்த தமிழ் படங்களையே திரும்ப திரும்ப காப்பியடிக்கிறார்கள். சில மானஸ்தனுங்க மட்டும், ரீமேக் என்று நாகரீகமாக உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள். அந்த வகையில் லேட்டஸ்ட் உப்புமா மன்னன் படம்தானாம்.

ரஜினி, கவுண்டமணி, விஜயசாந்தி என்று பிரமாதமான ஆர்ட்டிஸ்டுகளால் திரையரங்கம் அதிர அதிர ஓடிய அப்படத்தை மீண்டும் பார்ப்பதில் கண்டிப்பாக எரிச்சல் வரப்போவதில்லை. ஒரிஜனல் மன்னன் படமே டிவிகளில் இப்போது ஓடுகிறது. அதே வேகத்தில் தாறுமாறாக ரசிகர்களை பெற்று வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் அதே மன்னன் படத்தில் விஜய் நடித்தால் எப்படியிருக்கும்? முயற்சி செய்ய கிளம்பிவிட்டது பழைய மன்னனை தயாரித்த அதே பட நிறுவனம். முதல் ஓ.கே விஜய்யிடமிருந்துதானாம்.

அதற்கப்புறம் இந்த படத்தை இயக்கப் போவது கே.எஸ்.ரவிகுமார். ரஜினிக்கும் ரவிகுமாருக்குமான நட்பு, ஆழமானது. அகலமானது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கே.எஸ்.ரவிகுமாரின் ஆபிசுக்கே வந்து அரட்டையடித்துவிட்டு போகிற அளவுக்கு இவர் விஷயத்தில் ஈகோ பார்ப்பதேயில்லை ரஜினி. இந்த மன்னன் படம் ரவிகுமாருக்கு கிடைத்ததில் ரஜினியின் பங்கு இருப்பதாக காதை கடிக்கிறது இன்டஸ்ட்ரி.

ரஜினி நடித்த கேரக்டரில் விஜய்? பெரிய சவால்தான்! சமாளிப்பாரா?

1 Comment
  1. Kalaipriya says

    SUPER STAR IS ALWAYS SUPER STAR.
    LONG LIVE OUR EVER GREEN SUPER STAR RAJINI

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Anjala – Tea Podu Song Link

Close