முதன்முறையாக ரஜினியின் குட் புக்கில் விஜய்!

‘என் வழி தனீ…ஈ வழி’ என்றுதான் போய் கொண்டிருக்கிறார் ரஜினி. ஆனால் சுற்றியிருப்பவர்கள் விட்டால்தானே? ரஜினி யார் பக்கம்? அவருக்கு அஜீத்தை பிடிக்குமா? விஜய்யை பிடிக்குமா? என்றெல்லாம் விவாதங்களை கிளப்பி, அவர்களே அதற்கு ஒரு சொல்யூஷனையும் சொல்லி வந்தார்கள். விஜய் நடிக்கும் படத் துவக்க விழாக்களுக்கு பலமுறை அழைக்கப்பட்டும் ஒருமுறையும் சென்றதில்லை ரஜினி. ஆனால் அஜீத்தின் ‘அசல்’ படம் துவங்கியபோது நேரில் சென்று வாழ்த்தினார். அதோடு கிளம்பினாரா? தான் படிக்கும் ஆன்மீக புத்தகங்களையெல்லாம் அஜீத்திற்கும் வாங்கிக் கொடுத்து அவரையும் அரை சாமியாராக்கிவிட்டு போனார்.

அதற்கப்புறமும் இருவரது நட்பும் பல வருடங்களாக தொடர்கிறது. அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கலந்து கொண்ட விழாவில் அஜீத்தின் ‘தைரியப் பேச்சு’ மறுநாளே வேறு வேறு யோசிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்த, நடுவில் புகுந்து ஐஸ் வாட்டர் ஊற்றி அனலை தகித்தவர் ரஜினிதான்.

திடீரென விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று முன்னிறுத்திய போது அதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தார் ரஜினி. தற்போது அவர் வாயை திறக்கும் நேரம் இது. ‘பகையே.. உன்னை போரில் பார்க்கிறேன். நிஜத்தில் நீயென் அருகில் இருக்கிறாய்’ என்பதற்கு ஒப்பான செயல் இது. புலி படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள். அது குடும்பத்துடன் பார்க்க உகந்த படமா? குழந்தைகளுக்கு பிடிக்குமா? என்றெல்லாம் சந்தேகங்கள் குழப்பியடிக்க, புலி கலெக்ஷன் அதற்குள் இறங்கினால் அது இன்டஸ்ட்ரிக்கும் சரி, விஜய்க்கும் சரி… நல்லதல்ல என்பதை நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறார் ரஜினி.

புலி படக்குழு சார்பாக ரஜினியிடம் படம் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாம். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறினால், அது எங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாம். உடனடியாக தனது வீட்டிலேயே இருக்கும் பிரத்யேக தியேட்டரில் படம் பார்த்த ரஜினி, தன் கருத்துக்களையும் நாட்டு மக்களுக்கு தெரிவித்துவிட்டார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புலி படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இது மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்ட செட்டுகள் என்னை ரசிக்க வைத்தது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தன. படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த புலி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.

விஜய்யின் நடிப்பு என்ன ஈர்த்தது, விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது. ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்த படம் இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லிங்காக இருந்தது. குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம் குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் புலி. Hats Off to the Puli Team.

அப்புறமென்ன? இந்த நிமிஷத்திலிருந்து ரஜினி ரசிகர்களின் பேராதரவும் புலிக்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Read previous post:
தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் – 2015 பாண்டவர் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு மற்றும் ஆலோசனை கூட்ட Full Video Link

https://drive.google.com/folderview?id=0B4DIan1NVbGVZDROX25XREt6UVE&usp=sharing https://drive.google.com/file/d/0B4DIan1NVbGVVTJuYVZnM1RSSHM/view?usp=sharing

Close