விஜய்க்கு பெரிய மனசு! அதைவிட பெரிய மனசு ஜீவாவுக்கு!

ஒன்லி இன்கமிங்…. இந்த கொள்கையில் விடாப்பிடியாக இருப்பார்கள் பல முன்னணி ஹீரோக்கள். அவர்களிடமிருந்து நார் உரிப்பதற்குள் கட்டைவிரல் சுண்டு விரலாகி, சுண்டு விரலும் சுண்டைக்காய் விரலாகிவிடும். இந்த காலத்திலும் இப்படியா? என்று வியக்க வைக்கிற மனசு யாருக்கு இருந்தாலும் ஒரு ஹேட்ஸ் ஆஃப் சொல்லிதானே ஆகணும்? ஹேட்ஸ் ஆப் விஜய், ஜீவா.

தன்னிடம் பி.ஆர்.ஓவாக இருந்த பி.டி.செல்வகுமாரை தனக்கே மேனேஜராக்கி பின்பு புலி படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆக்கி அழகு பார்த்தார் விஜய். இது ஒன்றும் புதுசு இல்லை. இதற்கு முன் பல ஹீரோக்கள் அதை செய்திருக்கிறார்கள். ஆனால், புலி படத்தின் போது ஏற்பட்ட சிக்கல்களால் மனம் நொந்து போயிருக்கும் பி.டி.செல்வகுமாருக்கு மீண்டும் ஒரு படம் என்ற முடிவை எடுத்திருக்கும் விஜய், மற்ற ஹீரோக்களோடு ஒப்பிட்டால் கண்டிப்பாக டாப்தான்! இந்த படத்தை இயக்குனர் ஹரியும், செல்வகுமாருமே இணைந்து தயாரிக்கிறார்களாம்.

விஜய் அப்படி நெகிழ வைத்தால், அதைவிட பிரமாதமாக ஒரு காரியத்தை செய்து செல்வகுமாரை கண்கலங்க வைத்துவிட்டார் ஜீவா. புலி ரிலீசின் போது வருமான வரி சோதனை வந்ததால் நினைத்தபடி வியாபாரத்தை செய்ய முடியாமல் செய்த வியாபாரத்தின் பொருளை அனுபவிக்க முடியாமல் அவஸ்தைப்பட்டார் பி.டி.செல்வகுமார். நொந்து போயிருந்தவரை ஒரு நாள் நேரில் அழைத்த ஜீவா, ‘‘இந்தாங்க” என்று ஒரு சொத்துப்பத்திரத்தை கொடுத்து, “இதை வச்சு ரெண்டு கோடி வாங்கி படம் எடுங்க. நானே கால்ஷீட் தர்றேன்” என்று கூற, ஆடிப்போனாராம் பி.டி.எஸ்.

அந்தப்படம்தான் போக்கிரி ராஜா. நீங்க போக்கிரி ராஜாயில்ல ஜீவா, ஜாங்கிரி ராஜா!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தமிழ்சினிமா காதலும்… சகிக்க முடியாத பரிணாம வளர்ச்சியும்!

ஆண்டவன் ‘ஆக்ஷன்’ சொன்ன பிறகுதான் அந்த ஆதாமே, ஏவாளை ‘லுக்’ விட்டிருப்பார் என்று தோன்றுகிறது! கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியது லவ் என்கிற...

Close