சாவிய போடுறதுக்குள்ளே சைலன்சரை புடுங்குறாங்க…!

சாவிய போடுறதுக்குள்ளே சைலன்சரை புடுங்கி விடுற வேலை நம்ம ஊரில்தான் நடக்கும். ஒரு முன்னணி ஹீரோ மனிதாபிமான அடிப்படையில் ஒரு விஷயம் செய்தால், அதை ஊதி பெரிதாக்கி அவருக்கே சிக்கல் உண்டாக்குவதைதான் சொல்கிறோம்…

நடிகர் விஜய்யும் குழந்தை அர்ஷியாவும் ஒன்றாக அமர்ந்திருக்கிற படங்களை ஊடகங்களில் பார்த்தவர்களுக்கு பெரு மகிழ்ச்சியும், விஜய் மீது பேரன்பும் ஏற்பட்டிருக்கும். காரணம், அந்த குழந்தை சாதாரண குழந்தையல்ல. இந்தியாவுக்காக தன் இன்னுயிரை மாய்த்த மேஜர் முகுந்தின் குழந்தை. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் அங்கு வந்திருந்த அர்ஷியாவை எடுத்து மடியில் வைத்துக் கொண்டார். இந்த கிளிக் அதற்கப்புறம் நாடு முழுக்க பரவியதும் நல்ல விஷயம்தான். அதற்குள் அதில் கண் காது மூக்கு இத்தியாதிகளை பொருத்துகிற வேலையில் இறங்கிவிட்டார்கள்.

அந்த குழந்தையின் வாழ்நாள் படிப்பு செலவை விஜய் ஏற்றுக் கொள்ளப் போவதாகவும், அந்த குடும்பத்திற்கு பெருமளவு நிதியுதவி செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. நல்லவேளை… இந்த தகவல்கள் சம்பந்தப்பட்ட பேமிலிக்கு தெரியவர, இதற்கு விளக்கமும் அளித்திருக்கிறார்கள்.

குழந்தை அர்ஷியாவுக்கு விஜய்யை மிகவும் பிடிக்குமாம். அதனால்தான் அந்த போட்டோ எடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் கூறுவதை போல, விஜய்யின் எந்த உதவிகளையும் ஏற்கும் நிலையில் நாங்கள் இல்லை. நல்ல பொருளாதார வசதியுடன்தான் இருக்கிறோம். அவரும் அப்படியொரு வாக்குறுதி தரவில்லை. நாங்களும் கேட்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

இமேஜை பில்டப் பண்ணுவதற்காக யாரை வேண்டுமானாலும் டேமேஜ் பண்ணுவாங்களோ?

Read previous post:
பூவரசம் பீ பீ / விமர்சனம்

குழந்தை முகமூடியோடு வந்திருக்கும் ஒரு நாலாந்தர படம்! அற்புதமான ஒளிப்பதிவு, அழகான குழந்தைகள், அலட்டல் இல்லாத நடிப்பு. ஆனால் எல்லாவற்றையும் ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆக்குகிறது...

Close