விஜய்யை ரஜினியாக்காம ஓய மாட்டோம்! திட்டம் போட்டு கட்டம் கட்டு!

விஜய்யை ரஜினியாக்க நடக்கும் முயற்சியில் கால் கிணறு அரைக் கிணறு தாண்டி இப்போது முக்கால் கிணறுக்கு வந்திருக்கிறார்கள் அவரது சப்போர்ட்டர்கள். சமீபத்தில் நடந்த தெறி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அதை நன்றாகவே பார்க்க முடிந்தது. விஜய் பற்றிய ஒரு அறிமுக ட்ரெய்லர் ஓட்டினார்கள். அதில் எம்.ஜி.ஆர் கிளிப்பிங்கஸ்… ரஜினி கிளிப்பிங்ஸ்… அதற்கப்புறம் விஜய் கிளிப்பிங்ஸ் போடப்பட, ஒரே உய் உய்…தான்.

அதற்கப்புறம் நடந்ததுதான் செம மேட்ச். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியின் மகளாக நடித்த நடிகை மீனா, “ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க” என்று கேட்பாரல்லவா? இந்த மேடையில் மீனாவின் மகள் நைனிகாவை மேடையில் ஏற்றி, “விஜய் அங்கிள்… நீங்க எங்கியிருக்கீங்க?” என்று அதே மாடுலேஷனில் கேட்க வைத்ததெல்லாம், “அண்ணே… உங்களை நெருங்கிட்டேன்’ என்று சொல்வதற்காக இருக்குமோ? எது எப்படியோ? தெறி விஜய் பட வியாபார வரலாற்றில் தன் முந்தைய படங்களையெல்லாம் முந்தி நிற்கிறதாம்.

நல்லா கட்டுங்க கல்லா!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Thirunaal – Event Stills

Close