க.தி.வ.இ படத்தை சூப்பர் ஹிட்டாக மாற்றிய விஜய்?

பார்த்திபன் போல ஒரு ‘எல்லார்க்கும் பெய்யும் மழை’ இருக்கவே முடியாது. மற்றவர்களை புகழ்ந்து பாடியே பரிசில் பெறும் அந்த கால புலவர்கள் போல, பார்த்திபனின் நாக்கு, பல நேரங்களில் இப்படி சில ஹீரோக்களுக்காக வளையும். அதில் ஒரு அற்புதமும் விளையும். சொல்ல முடியாத பல லவ்வுகளை மேடையில் போட்டு உடைத்து பிரிட்ஜ் போட்டுக் கொடுக்கிற வித்தை தெரிந்த இந்த அசகாய சூரரை தங்கள் நட்பு வளையத்திற்குள் வைத்திருக்காத நடிகர்கள் யாருமே இல்லை என்று கூறிவிடலாம். மிக சமீபகாலமாக இவர் ஆர்யாவின் கால் டாக்சிக்குதான் அதிக விளம்பரம் கொடுத்து வருகிறார் என்பதை சினிமா விழாக்கள் பல நிரூபித்திருக்கின்றன.

இத்தனை ஆண்டு கால ‘போற்றி பாடடி பெண்ணே’வுக்கு கிடைத்த பரிசுதான் அவர் படத்தில் வரிசையாக முன்னணி நடிகர்கள் வந்து நடித்துக் கொடுத்தது. பார்த்திபனை பொருத்தவரை இந்த உதவி, அவரது திரைக்கதைக்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்றாலும், ஒரு ஓப்பனிங்குக்கு உதவியது என்றே சொல்ல வேண்டும். மிக நீண்ட காலம் கழித்து ஒரு நிஜமான, நியாயமான வெற்றியை பெற்றிருக்கிறது கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம். தனது பல வருட கடனையெல்லாம் அடைத்துவிட்டு பார்த்திபன் நிம்மதியாக இருப்பார்.

இந்த நேரத்தில் பார்த்திபனின் திரையுலக நட்பு வட்டத்திற்கு மரியாதை சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது அந்த சந்திப்பு. கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை பார்த்த கையோடு பார்த்திபனை தேடியே வந்துவிட்டாராம் விஜய். நேரில் வந்து தன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துவிட்டு போயிருக்கிறார். பொதுவாக விஜய் போன் செய்து பாராட்டுவார். மிக நெருங்கிய நட்புகளுக்கு மட்டும்தான் நேரடி விஜயம். இந்த முறை பார்த்திபன் இல்லம் தேடி வந்து அவர் வாழ்த்தியிருப்பதால், பார்த்திபனின் ஹிட், இப்போது சூப்பர் சூப்பர் ஹிட்டாக மாறியிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ஆயிரம் தோட்டாக்கள்! ’ அஜீத் மனசில் எரிந்ததா பல்ப்?

பெத்த புள்ளைக்கு கூட ஒரு பெயர் வைக்க இவ்வளவு யோசிக்க மாட்டாங்க போலிருக்கு, அதிக பட்சம் ஒரு மாதம் மட்டுமே மாஸ் கிளப்ப போகும் ஒரு படத்திற்கு...

Close