நிஜ சூப்பர் ஸ்டாரின் பாடலுக்கு ஆக்டிங் சூப்பர் ஸ்டார் விஜய் ரீயாக்ஷன்?

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைத்தபாடில்லை. அதற்குள் பட்டம் சூட்டி, கிரீடத்தையும் அணிந்து கொள்ள வைத்துவிட்டார்கள் விஜய்யை. இதை பொறுக்க முடியாத ரஜினி ரசிகர்கள் ‘ஒரு சூரியன்,ஒரு நிலா, ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான்’ என்று கொந்தளித்துக் கொண்டிருக்க, இன்னொருபுறத்தினர் அதையெல்லாம் கண்டு கொள்வது மாதிரி தெரியவில்லை. ‘உங்களில் யார் சூப்பர் ஸ்டார்?’ என்று தெரு தெருவாக போய் சென்சஸ் எடுக்காத குறையாக ‘அவராக்கும் இவராக்கும்’ என்று அளந்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் நிஜ சூப்பர் ஸ்டாருடைய பாடல்களை ஆக்டிங் சூப்பர் ஸ்டார் விஜய்யிடம் போட்டுக் காட்டியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

கபாலி படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன்தான் விஜய் -60 படத்திற்கும் இசையமைப்பாளர். ஒரு நாள் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போயிருந்தாராம் இவர். விஜய்யிடம் பேசிக் கொண்டிருந்தபோது, கபாலி பாடல்கள் பற்றியும் பேச்சு வந்ததாம். அப்போது, “ஐ போன்ல பாட்டு வச்சுருக்கேன். கேட்கிறீங்களா?” என்று சந்தோஷ் நாராயணன் கேட்க, “அப்படியா… உடனே கேட்போம்” என்று தயாராகிவிட்டாராம் விஜய். ‘நெருப்புடா… நெருங்குடா…’ பாடலை போட்டுக் காட்டியிருக்கிறார் சந்தோஷ்.

படு பயங்கர உற்சாகமாகிவிட்டாராம் விஜய். “நல்லாயிருக்கு. நல்லாயிருக்கு” என்று பாராட்டியதுடன், அந்த பாடல் குறித்து சில நிமிஷங்கள் பேசிக் கொண்டிருந்தாராம். அதே டெம்போவுடன் எனக்கும் ஒரு பாட்டு என்று விஜய் கேட்டதாகவும் தெரிகிறது.

ம்… நடக்கட்டும்!

1 Comment
  1. Vijasy says

    Vijay Super star ku asai padalanu pala idathula sollitaru da mudam.. Inum neenga unga polappuku Vijay ah pidichu thongureenga

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Celebraties at Chennai book fair 2016

Close