சிவாஜி புரடக்ஷனில் விஜய்! செல்வராகவனுக்கு அதிர்ஷ்டம்?
வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள், கொஞ்ச நாளிலேயே தாழ்வாங்கு தாழ்வதைவிட பெரும் கொடுமை வேறில்லை. ஒரு காலத்தில் வெறும் செல்வராகவன் என்ற பெயர் போதும். கோடி கோடியாக கொட்டிக் கொடுக்க தயாராக இருந்தது விநியோகஸ்தர் வட்டாரம். தனுஷை ஆளாக்கியது மட்டுமல்ல, தன்னையறியாமல் எண்ணற்ற விநியோகஸ்தர்களை பணக்காரர் ஆக்கியவர் செல்வராகவன்.
அதற்கப்புறம் மண்டைக்குள் பொக்லைன் வந்து தோண்டி தோண்டி பதியம் போட்ட, ஆயிரக்கணக்கான சாத்தான்கள் வேர் விட்டு கிளை பறப்ப… நான் எடுக்கறதுதாண்டா படம். பார்க்குறது உங்க தலையெழுத்து என்று நம்பினார் அவர். விளைவு? தியேட்டரில் சுண்டல் விற்கும் பையன் கூட, செல்வராகவனை மதித்தான் இல்லை.
காலம் போட்ட முரட்டு புரட்டலில் என்னென்னவோ ஆன செல்வராகவன் இப்போதுதான் மெல்ல கரையேறி வருகிறார். அவரிடம் கதை கேட்கவே முன்னணி நடிகர்கள் அஞ்சிய போது ஒரு தயக்கமும் இல்லாமல் கதை கேட்டார் விஜய். அதற்கப்புறம் சிக்னல் கிளீன்.
இப்போது விஜய்யிடம் கால்ஷீட் கேட்டிருக்கும் சிவாஜி புரடக்ஷன் பிரபு, தங்கள் படத்தில் செல்வராகவனையும் உள்ளே புகுத்த ஆசைப்படுகிறார்களாம். அதே நேரத்தில் ஹரியும் போட்டியில் இருப்பதால், யாருக்கு யார் கூட்டணி என்பதுதான் இப்போதைய பொல்லாத எதிர்பார்ப்பு.
சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க பிரபு சார்…