அஜீத் விஜய் ரசிகர்கள் அடிச்சுக்கறதை விட்டுட்டு இன்னொரு வேலை செய்யலாம்! விஜய் சேதுபதி யோசனை!

மொபைல் கோர்ட், மொபைல் போலீஸ் ஸ்டேஷன் போல, பேஸ்புக் கோர்ட், ட்விட்டர் போலீஸ் ஸ்டேஷன்கள் எதிர்காலத்தில் தேவைப்படும் போலிருக்கிறது. அதிலும் அஜீத் விஜய் ரசிகர்களுக்குள்ளே நடக்கும் கருத்து மோதலை கண்காணிப்பதற்காகவே ஸ்பெஷல் வலைதள கோர்ட் ஒன்று இருந்தால் நிலைமை கட்டுக்குள் அடங்கும் போலிருக்கிறது. இவர்களின் சண்டை, நாடறிந்த ஒன்றாகிவிட்ட நிலையில் அப்படியெல்லாம் அடிச்சுக்காதீங்க என்று உரிமையோடு சொல்வதற்கும் ஒரு நல்ல மனுஷன் வேணுமல்லவா?

அந்த நல்ல மனுஷனாக நம்ம விஜய் சேதுபதி வந்திருக்கிறார் இப்போது. சில தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அவர் சொன்ன கருத்து, ஒவ்வொரு சினிமா ரசிகனும் மண்டைக்குள் ஏற்றி மரியாதை தர வேண்டிய ஒன்று. அப்படி என்னதான் சொன்னார் விஜய் சேதுபதி.

“சினிமா நடிகர்களுக்காக இளைஞர்கள் சண்டையிட்டுக் கொள்வது கஷ்டமாக இருக்கிறது. ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் சண்டையிட்டு கொள்வதைப் பார்க்கிறேன். அது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இதில் இருக்கும் ஆர்வத்தில் ஓரளவையாவது அரசியலில் செலுத்த வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். முடிந்த அளவுக்கு அனைவருமே ஏதாவது ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினராகவாவது இருக்க வேண்டும் என நினைக்கிறேன். 18 வயதைக் கடந்த இளைஞர்கள் ஏதாவது ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அதை ஒரு முக்கியமான தேவையாக பார்க்கிறேன். உறுப்பினராக இருக்கும்போது இளைஞர்கள் தேடித் தேடி தெரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

ட்விட்டர், ஃபேஸ்புக் வந்தால் கூட ஜாதிய எண்ணம் இன்னும் போகவில்லை எனத் தோன்றுகிறது. அந்த எண்ணம் ஆழமாகிறது, அது ஏன் என்று தெரியவில்லை. இன்று நிறைய காதல் திருமணங்கள் நடக்கிறது, அது நல்ல விஷயம். ஜாதியை மையப்படுத்தி சில திருமண விளம்பரங்களைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது”

இதுதான் அவரது கவலை. இப்படியெல்லாம் துணிச்சலாக பேசுகிறாரே, அதற்காகவே ஒரு வணக்கம் வாத்தியாரே!

இதே செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க இங்கே க்ளிக் செய்யவும் https://www.youtube.com/watch?v=IfDfyfqV0Kg

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கொடி படத்தில் கொலை செய்யப்படும் தனுஷ்?

ஏறுமுகத்தில் இருந்த தனுஷுக்கு தங்க மகன் திரைப்படத்தின் ரிசல்ட், சத்தியமாக தங்கம் இல்லை. பித்தளையைவிடவும் கீழே! அப்படத்தின் தோல்வி தனுஷை ரொம்பவே உஷாராக்கிவிட்டது. உடனே துவங்குவதாக இருந்த...

Close