எனக்கும் விஜய் சேதுபதிக்கும் நோ பாலிடிக்ஸ் போட்டு உடைக்கும் விஷ்ணு விஷால்!

வெண்ணிலா கபடிக்குழு படத்தையும் சேர்த்து எட்டு படங்களில் நடித்து விட்டார் விஷ்ணு. அப்படியே அடிஷனலாக அவரது ஒரிஜனல் பெயரான விஷாலையும் சேர்ந்துக் கொள்ளுங்கள். விஷ்ணுவிஷால்! எட்டுல எட்டும் சொத்தையா போறது ஒருவகை. எட்டுல பாதிக்கும் மேல ஹிட்டடிக்கறது ரெண்டாவது வகை. விஷ்ணுவிஷாலை பொறுத்தவரை அவர் இரண்டாவது வகை. முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை என்று கலெக்ஷன் ஏரியாவில் கையை கடிக்காத ஹீரோதான் அவர். இன்னும் சில வாரங்களிலோ, அல்லது சில மாதங்களிலோ திரைக்கு வரவிருக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இவரும் ஒரு ஹீரோ. அந்த இன்னொரு ஹீரோ விஜய் சேதுபதி என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

‘அவரும் பெரிய ஹீரோ. நீங்களும் வளர்ந்து வரும் ஹீரோ. ஒரே படத்தில் நடிக்கும் போது, யாருக்கு இம்பார்ட்டன்ஸ் என்ற சிக்கல் வருமே, சமாளிச்சுட்டீங்களா?’ என்றால் டென்ஷனே ஆகவில்லை விஷ்ணு. ‘நானும் விஜய் சேதுபதியும் நல்ல பிரண்ட்ஸ். வெண்ணிலா கபடிக்குழுவுல ஒரு சீன்ல வந்துட்டு போவாரு அவர். யாரும் உற்று கவனிச்சா தெரியும். அந்த படத்தின் ஹிட்டுக்கு பிறகு என்கிட்ட கதை சொல்ல, அவரோட பிரண்டு ஒருத்தரை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். அதனால் அவர் பெரிய ஹீரோவாகறதுக்கு முன்னாடியிருந்தே நானும் அவரும் பிரண்ட்ஸ் என்பதால் இந்த சிக்கல் இல்ல. ஆனால் ஒரு தகவல் சொல்றேன். இந்த படத்துல அவருக்கு மூணு பைட் இருக்கு. எனக்கு ஒண்ணுகூட இல்ல….’ (இதையும் சந்தோஷமாக பகிர்ந்து கொள்ள ஒரு மனசு வேணும்ல?)

ஆமா… நடிகர் சங்க தேர்தல்ல யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? என்ற தர்மசங்கட கேள்விகளையெல்லாம் சாமர்த்தியமாக தவிர்த்த விஷ்ணுவிஷால் சொன்ன ஒரே விஷயம் இதுதான். நான் விஷால், ஆர்யாவெல்லாம் திக் பிரண்ட்ஸ். அவங்க எங்க இருக்காங்களோ அங்க நான் இருப்பேன். இந்த நடிகர் சங்க விஷயத்தை பொருத்தவரை விஷால் பக்கம் நியாயம் இருக்குன்னு தோணுச்சு. சும்மாவே அவர் பக்கம் நிற்கும் நான், இப்ப நிக்க மாட்டேனோ?’ என்றார் ஆணியடித்தார் போல.

ஒரு ஸ்மார்ட் தகவல்- சூப்பர் ஸ்டார் ரஜினியின் குளோஸ் பிரண்ட் நட்ராஜின் மகளைதான் லவ் மேரேஜ் பண்ணியிருக்கிறார் விஷ்ணுவிஷால். இவரது அப்பா ரமேஷ் குடவாலா காவல் துறையில் உயரதிகாரியாக இருக்கிறார்.

Read previous post:
எல்லாம் ஒரு வௌம்பரந்தேன்! அடங்காத தேவிஸ்ரீபிரசாத்

இப்போதெல்லாம் இசையமைப்பாளர்களுக்கு அவர்கள் இசையமைக்கும் படத்தின் ஹீரோக்களை விடவும் பெரிய பாபுலாரிடி கிடைத்து விடுகிறது. எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஜீனியஸ்களுக்கு கிடைத்த புகழ் வேறு. அதற்கப்புறம்...

Close