எல்லாம் ஒரு வௌம்பரந்தேன்! அடங்காத தேவிஸ்ரீபிரசாத்

இப்போதெல்லாம் இசையமைப்பாளர்களுக்கு அவர்கள் இசையமைக்கும் படத்தின் ஹீரோக்களை விடவும் பெரிய பாபுலாரிடி கிடைத்து விடுகிறது. எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஜீனியஸ்களுக்கு கிடைத்த புகழ் வேறு. அதற்கப்புறம் வந்த சின்ன சின்ன மின்மினிகளான இவர்களுக்கு கிடைத்திருக்கும் புகழ் வேறு. முன்னவர்களுக்கு கிடைத்தது கோடி வாட்ஸ் பவருள்ள மின்னல் என்றால், இவர்களுக்கு கிடைத்திருப்பது தெருமுனையில் மின்னி மின்னி எரியும் குழாய் விளக்கின் வெளிச்சம்தான்.

தனது மியூசிக்கை விடவும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் இவர்கள் காட்டுகிற ஆர்வம் இருக்கிறதே… ‘அப்படியே ஷாக்காயிட்டேன்’ நிலைமைதான் உற்று கவனிக்கிற அத்தனை பேருக்கும். டி.இமான், விஜய் ஆன்ட்டனி, ஜி.வி.பிரகாஷ், வரிசையில் தேவி ஸ்ரீ பிரசாத் எல்லாரையும் விட ரேசில் முதலிடத்தில் இருக்கிறார். ஆந்திராவில் இவரை ஒரு ஹீரோவுக்கு இணையாக வைத்து கொண்டாடுகிறது ரசிகர்கள் உலகம். இவரை முன்னணி நடிகைகளுடன் இணைத்து கிசுகிசு எழுதுகிற அளவுக்கு மீடியாவும் தயார் நிலையிலேயே இருக்கிறது.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் லேட்டஸ்ட் அதிரடி இன்று வெளியான ஸ்டில் ஒன்றுதான். அதில் இவர் ஸ்ருதிஹாசனை பாட வைப்பது போல காட்சி. ஸ்ருதியின் குவிந்த உதடுகளும், பக்கத்தில் நிற்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பர்பாமென்சும், திட்டமிட்டு எடுக்கப்பட்டவைதானே தவிர வேறில்லை. புலி படத்தில் விஜய்யும் ஸ்ருதிஹாசனும் பாடுகிற பாடல் ஒன்றின் ரெக்கார்டிங் சமயத்தில் எடுத்த புகைப்படமாம் இது.

ஒரு சின்ன சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது. வந்தே மாதரம் ஆல்பத்தில் நடித்த ஏ.ஆர்.ரஹ்மான், மிகுந்த கூச்சத்துடன் அந்த வீடியோ பதிவை தன் அம்மாவின் கையில் கொடுத்துவிட்டு ஓடியே விட்டாராம். அவ்வளவு வெட்கம்…? ஷை… என்று தப்பி ஓடும் ஜாம்பவான்களுக்கு மத்தியில்தான், இதுபோன்ற ஹைக்கிளாஸ் காமெடிகள். அதே நேரத்தில் இன்னொன்றையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. இந்த அவசர உலகத்தில் எதையாவது செய்து தன் புராடக்டை முன்னிறுத்தும் சாமர்த்தியமும் தேவைப்படுகிறதே என்ன செய்ய?

அண்ணாத்தே…. பாட்டு நல்லாயிருக்கட்டும். இல்லேன்னா இந்த போட்டோவையே அடையாளமா வச்சுகிட்டு போட்டு தள்ளிரப் போறாங்க ரசிகர்கள்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘மூன்று முகம்’ வேணாம் அஜீத் பிடிவாதம்!

‘அஜீத்தின் அடுத்த படம் என்ன?’ டி.என்.பி.எஸ் சி தேர்வு தாளில் கூட இப்படியொரு கேள்வியை கேட்டு விடுகிற அளவுக்கு அவரை நெருக்கமாக வாட்ச் பண்ணிக் கொண்டிருக்கிறது ஊர்...

Close