ஷுட்டிங்குக்கு வீடு தர்றேன்! விஜய் கால்ஷீட் வாங்கித் தர்றீங்களா? அன்பாலே டச் பண்ணிய பிரபு?

கிவ் அண்டு டேக் பாலிஸிதான் வாழ்க்கை என்றாகிவிட்ட காலம் இது. மீன் குழம்புக்கும் சட்டிக்கும் நடுவில் கூட ஒரு வியாபார வாசனை அடித்துக் கொண்டிருக்கும் காலமிது. இங்கு அன்புன்னா கோடி, நட்புன்னா மிலியன் என்று ஆக்கிவிட்டது சினிமா. இங்கு இவர் அவருக்கு படம் பண்ணினாலும், அவர் இவருக்கு கால்ஷீட் கொடுத்தாலும், அடியில் படிந்து கிடப்பது அமைதியான ஒரு வியாபார கால்குலேஷன்தான்.

இந்த நேரத்தில்தான் அதை இன்னும் பலமாக யோசிக்க வைப்பது போல ஒரு விஷயம். நடிகர் பிரபு அட்லீயை வைத்து அடுத்த படத்தை தயாரிக்கப் போகிறார். ஏராளமான படங்களை எடுத்து குட் லிஸ்ட்டில் இருக்கும் சிவாஜி புரடக்ஷன் சார்பில் இந்தப்படம் தயாராகப் போகிறதாம்.

இந்த அட்லீக்கும் பிரபுவுக்கும் அழுத்தமான ஒரு நட்பு ஏற்பட்டது ஒரு விஷயத்தில்தான். சமீபத்தில் திரைக்கு வந்த தெறி படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிவாஜியின் அன்னை இல்லத்திலேயே நடந்தது. அப்போது சிவாஜி பேமிலிக்கும் அட்லீ பேமிலிக்கு நடுவில் ஒரு தீராத பந்தம் உருவாகிவிட்டது. அதை பணமாக்குகிற விதத்தில்தான் இன்னொரு சம்பவமும் நடந்தது. இந்த படத்தின் ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே, நாம மீண்டும் ஒரு படத்தில் இணையுறோம். கதையை தயார் பண்ணுங்க என்று கூறிவிட்டார் விஜய்.

அந்த கதையை நம்ம கம்பெனிக்கு பண்ணுங்களேன் என்று பிரபு கேட்க, அதுக்கென்ன… தாராளமா என்று கூறியிருக்கிறாராம் அட்லீ.

விரைவில் சிவாஜி புரடக்ஷனில் விஜய் நடிக்கப் போகும் புதிய படத்தின் அறிவிப்பு வரக்கூடும். ஏற்கனவே அஜீத்தை வைத்து அசல் படத்தை எடுத்த நிறுவனம் ஆச்சே? அப்படியே விஜய்க்கும் ஒரு லட்டு. அல்லது விஜய் கையால் ஒரு லட்டு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
EN APPA – Maestro Ilayaraja speaks about his father

Close