ஸ்ருதிஹாசன் பாடுறாங்க… ஆனா விஜய் சார் ? புலி மியூசிக் டைரக்டர் தேவி ஸ்ரீ பிரசாத் பேட்டி
விஜய் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக் போடுவது ஒன்றும் புதுசு இல்லை. ஆனால் இந்த முறை ‘புலி’ படத்தில் கமிட் ஆகியிருக்கும் பிரசாத்துக்கு தொண்டைக் குழியில் வறட் வறட்! ஏன்? நெர்வஸ்தான். பொதுவா விஜய் சார் படத்துக்கு மியூசிக் போடுறதுன்னாலே ஒரு மகிழ்ச்சி தன்னால வந்துரும். துள்ளலும் துடிப்புமா மியூசிக் போடுவேன். அவரும் டான்ஸ்ல பிச்சு உதறிடுவாரு. இந்த முறை கொஞ்சம் வித்தியாசமா மியூசிக் போடணும்னு முடிவு பண்ணிட்டேன். எப்படி தெரியுமா?
‘அவர் டான்ஸ் இல்லாமல் அந்த பாடல்களை தனியா கேட்டால் கூட தன்னால துள்ளணும். அப்படியொரு அக்கறையோட இந்த படத்துக்கு மியூசிக் போட்ருக்கேன். மூணு பாட்டு கம்போசிங் முடிச்சாச்சு. அநேகமா ஆறு பாடல்கள் இருக்கலாம். ஒரு பாட்டு ஸ்ருதிஹாசன் பாடுறாங்க. விஜய் சார் கட்டாயம் பாடுவார். அது என்ன மாதிரியான பாட்டா இருக்கும்னு எனக்கே மனசுக்குள்ள குறுகுறுன்னு யோசனை ஓடுது. நிச்சயமாக அவரோட ரசிகர்களுக்கு கொண்டாட்டமா இருக்கும். அதுல ஒண்ணும் சந்தேகமில்ல’ என்றார் தேவி ஸ்ரீ பிரசாத்.
தெலுங்கு நடிகைகள் எல்லாருடணும் சேர்த்து கிசுகிசு வருதே? மியூசிக் டைரக்டர்கள் நிறைய பேரு நடிக்க வந்துட்டாங்க, நீங்க எப்போ? எப்ப கல்யாணம்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் சேர்த்து ஒரே பதிலாக சொன்னார் தேவி ஸ்ரீ பிரசாத்.
‘ஏன் சார்… நான் பாட்டுக்கு நிம்மதியா இருக்கேன். அது பொறுக்கலையா?’
அப்படியே இன்னொரு நல்ல செய்தி. சுமார் ஒரு மாத காலம் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்திவிட்டு வெற்றிகரமாக திரும்பியிருக்கும் இவருக்கு சென்னையில் அதுபோன்றதொரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்த ஆசையாம். அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.