ரஜினி மகள் இயக்கத்தில் விஜய் சேதுபதி! ஜோடி யாரு தெரியுமா?
நானும் ரவுடிதான் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவால், ஹேப்பி ஹேப்பியாகிக் கிடக்கிறார் தனுஷ். (தயாரிப்பாளராச்சே?) அப்படியே தனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே இருக்கும் மயிரிழையளவு எரிச்சலை இன்னும் அதிகப்படுத்துகிற திட்டமாக அவரது நேரடி போட்டியாளரான விஜய் சேதுபதியை உயர்த்திவிட முடிவு செய்துவிட்டார். அதன் தொடர்ச்சிதான், விஜய் சேதுபதியும் தனுஷும் மீண்டும் இணைகிற திட்டம். அவரது வொண்டர்பார் நிறுவனத்திற்கே மீண்டும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
தனுஷிடம், “இன்னும் எத்தனை படங்களுக்கு சேர்த்து அக்ரிமென்ட் போட்ருக்கீங்க?” என்று விநியோகஸ்தர்களும் ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள். அதிருக்கட்டும்… இந்த புதிய படத்தின் இயக்குனர் யார்?
சாட்சாத் ஐஸ்வர்யா தனுஷேதான். யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கிக் காட்டி, தனது திறமையை நிருபித்தவர் ஐஸ்வர்யா. அந்த நம்பிக்கையில்தான் விஜய் சேதுபதியும் அவரது இயக்கத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். அப்படியே இன்னொரு ஒஸ்தி சமாச்சாரம். தமிழ்சினிமாவின் டாப் மோஸ்ட் ஹீரோயின் நயன்தாராவுடன் டூயட் பாடிவிட்ட விஜய் சேதுபதிக்கு, அடுத்த இடத்திலிருக்கும் ஹன்சிகாவும் அல்வா துண்டு போல கிடைத்திருக்கிறார்.
இந்த புதிய படத்தில் ஹன்சிகாவைதான் கமிட் பண்ணி கொடுத்திருக்கிறார் தனுஷ்.