கலைஞர் பேமிலி ஹீரோ? இயக்குகிறார் விஜயகாந்த் ரசிகர்! ஆஹா இதல்லவோ கூட்டணி?

‘முத்துநகரம்’ படத்தை இயக்கிய திருப்பதிக்கு, அடுத்த படத்தில் முத்தான ஹீரோதான் கிடைத்திருக்கிறாரா என்பதை பார்க்க இன்னும் சில நாட்கள் காத்திருந்தால் போதும். ஆனால் மேற்படி ஹீரோ, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேமிலியிலிருந்து வந்தவர் என்பதுதான் அண்டர்லைன். பெயர் ரக்ஷன். முகஸ்டாலின் மனைவி துர்காவின் தம்பி மகன்! “ஆரம்பத்துல இப்படியொரு பையன் இருக்காருன்னு சொன்னாங்க. வரச்சொன்னேன். நம்ம கதைக்கு சூட்டாவுறாருன்னு புக் பண்ணியாச்சு. அதுவரைக்கும் கூட, அவருக்கு இப்படியொரு பலே பேக்ரவுண்ட் இருக்கும்னு எனக்கு தெரியாது” என்கிறார் திருப்பதி! (நம்பிட்டோம் பாஸ்)

அதற்கப்புறம் விஷயம் தெரிஞ்சதும் சந்தோஷமா இருந்திச்சு. ஏன்னா நானும் அரசியல் பேக்ரவுண்ட்லேர்ந்து வந்தவன்தான். விஜயகாந்த் சாரோட தீவிர ரசிகன். தூத்துக்குடியில் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் நான் அவரோட ரசிகர் மன்ற தலைவராகவும் இருந்திருக்கேன். இப்போ கலைஞர் பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ கிடைச்சதும் மகிழ்ச்சியாதான் இருக்கு என்றார். மகிழ்ச்சி வார்த்தையில இருந்தா போதாதல்லவா? அதற்காகதான் ஒரு நல்ல காரியத்தை செய்திருக்கிறார் ஹீரோ ரக்ஷனின் அப்பா. இந்த திருட்டு ரயில் படத்தை தமிழகம் முழுவதும் தனது செலவிலேயே ரிலீஸ் பண்ணுகிறாராம். ‘பலா மரத்துக்கு தண்ணி ஊத்துனா, பலன் சுளை மேல….’

சரி… அதிருக்கட்டும். படத்தின் கதையென்ன? தூத்துக்குடியில் இருந்து ஒரு பிரச்சனையின் காரணமாக தப்பித்து வரும் நண்பர்கள் குழு ஒன்று திருட்டு ரயிலில் ஏறி வருகிறது. வந்த இடத்திலும் பிரச்சனை. நடுவில் ஹீரோவுக்கு ஒரு காதல். பிரச்சனையிலிருந்து எப்படி விடுபடுகிறார்கள் என்பதுதான் கதையாம். இதில் தமிழக போலீஸ் நடத்தும் போலி என்கவுன்ட்டர் ஒன்றை மையப்புள்ளியாக இணைத்து விறுவிறுப்பாக படத்தை உருவாக்கியிருக்கிறாராம் திருப்பதி. ரக்ஷனுக்கு ஜோடியாக கேத்தி என்ற ஹோம்லி லுக் ஹீரோயினை கர்நாடகாவிலிருந்து பிடித்து வந்திருக்கிறார்கள். (தமிழ்ல பொளக்குது பொண்ணு)

“என்னை பார்த்தா நடிப்பேனா, மாட்டேனான்னுதானே இருக்கு? படத்துல பார்த்துட்டு சொல்லுங்க” என்றார் அவர்.

திருட்டு ரயில் எந்த பிளாட்பாரத்தில் லேண்ட் ஆகுது என்பதையும் கவனிக்க ரெடி. பிளாட்பார்ம் ஒண்ணு- வெற்றி. பிளாட்பார்ம் ரெண்டு. ஆவரேஜ். பிளாட்பார்ம் மூணு- அது ‘பிளாப்’பார்ம். வண்டிய கவனமா லேண்ட் பண்ணுங்க திருப்பதி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் விஜய்? நடுவில் ஒரு உள் கனெக்ஷன்?

இரண்டு ஹீரோக்களுக்கு இடையே சண்டை வருவது இன்று நேற்றல்ல, தமிழ்சினிமா எப்போது வசனம் பேச ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே இருக்கிறது. பேஸ்புக்ல அடிச்சுக்குற அத்தனை ரசிகர்களும் போன பிறவியில்...

Close