காதலில் விழுந்தார் விஜயலட்சுமி! உதவி இயக்குனரை மணக்கிறார்?

எறும்பு புகுந்து வருகிற சந்தாக பார்த்து தனது காதலை அங்கு ஒளித்து வைக்கிற இயல்பு நடிகைகளுக்கு உண்டு. அப்படியும் அந்த இடத்தை பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்ந்து பொதுவுலகத்திற்கு கொண்டு வந்துவிடுகின்றன பத்திரிகைகள். நடிகை விஜயலட்சுமியின் காதலும் அப்படிதான் சிக்கிக் கொண்டது. மிக மிக ரகசியமாக நடந்து வந்த அந்த காதல் அரசல் புரசலாக வெளிப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரித்தால், அட ஆமாம்… என்கிறது கோடம்பாக்கத்தின் குழாயடி!

அவர் ஒரு உதவி இயக்குனராம். பெயர் பெரோஸ். வல்லினம் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார். விரைவில் கிருஷ்ணா நடிக்கும் ஒரு படத்தை இயக்கவும் போகிறார். பொதுவாகவே காதலுக்கு குறுக்கே நிற்கிற பழக்கம் விஜயலட்சுமியின் அப்பா டைரக்டர் அகத்தியனுக்கு இல்லை. எனவே இந்த திருமணத்திற்கு அவர் மனப்பூர்வமாக பச்சைக் கொடி காட்டிவிட்டாராம்.

இந்த திருமணம் அடுத்த மாதமே நடக்கவிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. சென்னை 28, வெண்ணிலா வீடு, வனயுத்தம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் விஜயலட்சுமி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள், விடிய விடிய நடந்தது என்ன?

அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ விந்தை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் ...

Close