நம்பியவரை நட்டாற்றில் விட்டாரா விஜய் சேதுபதி?

சினிமாவுலேயும் அரசியலிலேயும் எதிரியும் கிடையாது. நண்பனும் கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவற்றை தீர்மானிக்கும். கூட்டணி அரசியல், பாட்டனி அரசியலெல்லாம் பிறகு, ‘பேட்டா’ அரசியல் ஆவதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கிட்டதட்ட சினிமாவும் அப்படிதான் போய் கொண்டிருக்கிறது. நேற்று வரை பிரண்டு. இன்று…? “நீங்க யாரு சார்”தான்.

யதார்த்தவாதி என்று சினிமாக்காரர்களால் நம்பப்படும் விஜய் சேதுபதியே தன் நண்பரை கழற்றி விட்ட கதைதான் இது. அது எப்படி என்பதை பாதிக்கப்பட்டவரின் வாயாலேயே கேட்பதுதானே முறையாக இருக்கும்? விஜய் சேதுபதியை வைத்து வசந்தகுமாரன் என்ற படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்ட ஆனந்த் குமரேசனின் ஆதங்கம்தான் இது.

”வசந்தகுமாரன்” திரைப்படத்தை எழுதி இயக்குவதற்காக கடந்த டிசம்பர் 2012-ல் நான் ஒப்பந்தமாகினேன். பணிகளும் நடந்தன. பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் என்று வருடங்கள் நகர்ந்தன. தற்போது அத்திரைப்படம் கைவிடப்பட்டதாக ஊடகங்களின் மூலம் அறிகிறேன் ”வசந்தகுமாரன்” திரைப்படத்திற்குப் பதிலாக ”தர்மதுரை” என்கிற திரைப்படம் இன்று (டிசம்பர் 14 – 2015) படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக மீண்டும் ஊடகங்களின் மூலமே அறிகிறேன் பல்வேறு குழப்பங்களுக்கு ஆட்பட்டு, இதை நான் பதிவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளேன்…

1. வசந்தகுமாரன் திரைப்படம் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் கதாநாயகருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சினை என்றே அறியப்படுகிறது. அது என்ன பிரச்சினை?

2. அந்த பிரச்சினை எப்படி முடிவுக்கு வந்தது?

3. பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தால், சம்மந்தப்பட்ட படம்தானே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக ஏன் ”வசந்தகுமாரன்” கைவிடப்பட்டது?

4. அதற்குப் பதிலாக தர்மதுரை என்கிற திரைப்படம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது?

5. இவை எதுவுமே தொழில் அடிப்படையிலோ அல்லது குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையிலோ கூட தயாரிப்பாளரோ அல்லது கதாநாயகரோ, தகவலாகவோ அல்லது என்னை அழைத்து நேரிலோ ஏன் என்னிடம் இதுவரை தெரிவிக்கவில்லை.?

நான் பலமுறைத் தொடர்புகொள்ள முயற்சித்தபொழுதும் அவர்களிடம் சரியான பதில்கள் கிடைக்கவில்லை. பதில்களே இல்லை என்பதுதான் உண்மை. இப்பொழுது என்னுடைய எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். மூன்று வருடங்களாகக் காத்திருந்த எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. சுமார் பன்னிரெண்டு வருட சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஒரு திரைப்படம் கைவிடப்பட்டு அதற்குப்பதிலாக இன்னொரு திரைப்படம் நடக்கும்பொழுது அது ஏன் என்று விளக்கமளித்து துறை சார்ந்தவர்களுக்கும், ஊடகங்களுக்கும் ”அறிவிக்க” வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் எனக்காவது விளக்கமளிக்கவேண்டியது தார்மீக அடிப்படையில் உங்களது கடமை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். நான் உங்களிடம் படமோ, பணமோ அல்லது பரிதாபமோ வேண்டி நிற்கவில்லை. தயாரிப்பாளருக்கும் கதாநாயகருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையில், ஒரு முதல் பட இயக்குனராகிய நான் ஏன் சம்மந்தமே இல்லாமல் பலியாக்கப்பட்டேன் என்பது குறித்த ஒரு முறையான விளக்கம் மட்டுமே…

இவ்வாறு தன முகநூலில் வருந்தியிருக்கிறார் ஆனந்த் குமரேசன்.

நாம் ஒழுங்கா இருந்தாலும், தீதும் நன்றும் எப்ப வேணா வரும் போலிருக்கு!

1 Comment
  1. ஆனந்த் says

    எங்கள் தலைவர் நடிப்பில்1991-ம் ஆண்டு பொங்கல் திருநாள் அன்று வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற காவியம் தர்மதுரை. அடுத்தவன் கதையை தான் திருடிநீர்கள். இப்பொது முன்பு வந்த படத்தின் தலைப்பையும் சுட்டு விட்டிர்கள். உங்களுக்கு எல்லாம் சொந்த புத்தி என ஒன்று இருக்கிறதா ????

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Actress Amyjakson Latest Stills

Close