விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், தொடர்ந்து விஜய்சேதுபதிக்கும் அந்த ஆசை வந்திருச்சு?
முன்னோர் பெருமையை மூட்டை கட்டியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்கள் இளம் ஹீரோக்கள். ஏதோ, தமிழ்சினிமாவில் தலைப்பு வைக்க அவ்வளவு பஞ்சம் என்பதை போல, ரஜினி நடித்த தலைப்பை தேடி தேடி பிடுங்குவதும் அவர்களின் வாடிக்கையாக இருக்கிறது. அட, பழைய தலைப்பை எப்படியோ போராடி வாங்குகிறார்களே, அற்காக அந்த பழையை பெருமையை பீட் பண்ணுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. இருந்தாலும் இந்த டைட்டில் ‘ஹன்ட்டிங்க்’ தொடர்வதால், ரஜினியின் புகழுக்கு தீராத பிளாஸ்திரி.
மூன்று முகம் என்ற தலைப்புக்கு பெரும் போராட்டம் நடந்து வருவது ரசிகர்கள் அறிந்ததே. ரஜினியின் மருமகனான தனுஷ், எப்படியோ அவர் நடித்த தங்கமகன் தலைப்பை கைப்பற்றிவிட்டார். இப்போது விஜய் சேதுபதிக்கும் அந்த ஆசை வந்திருக்கிறதாம்.
மீண்டும் தன்னை அறிமுகப்படுத்திய சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கப் போகிறார் அவர். (இடம் பொருள் ஏவல் என்னாச்சுங்க?) அந்தப் படத்திற்குதான் ரஜினி நடித்த தர்ம துரை தலைப்பை வாங்க முயல்கிறார்களாம். யார் போனாலும், ரஜினி மெல்லிய புன்முறுவலோடு நோ அப்ஜெக்ஷன் கொடுத்துவிடுகிறார். அவரது ரசிகர்கள்தான் ஐயோ பாவம்.
இனி வரும் காலங்களில் ரஜினி படத்தின் தலைப்புகளை கூகுளில் தட்டினால், சிபிராஜோ, ஜித்தன் ரமேஷோ வந்து சவுக்கியமா என்று கேட்டு மாரடைக்க விட்டாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் இந்த அட்ராசிட்டிகளுக்கு முடிவேது?
தமிழ் சினிமாவில் இனி எவனும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படப் பெயர்களை பயன் படுத்த கூடாது. சுயமாக சிந்தியுங்கள்.