விஜய்சேதுபதி Vs சிவகார்த்திகேயன்! கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்?
அடுத்தவர் முதுகில் கீறல் போடுகிற வேலையை அறவே விரும்பாதவர் விஜய் சேதுபதி! அதே டைப்தான் சிவகார்த்திகேயனும்! போகிற போக்கில் இவர்களையும் அஜீத் விஜய் ஆக்கி இவர்களின் தொழில் போட்டி மீது கொத்து பரோட்டா விளையாட்டு விளையாடும் போலிருக்கிறது உலகம்!
நடிகர்களுக்கு நடுவே போட்டி இருக்கணும். ஆனால் பொறாமை இருக்கக்கூடாது! பெரிய நடிகர்களுக்கு மட்டுமல்ல, பிஸ்கோத்து நடிகர்களுக்கும் கூட இந்த விதி பொருந்தும். ‘அப்படிதான் உன் படம் உனக்கு. என் படம் எனக்கு’ என்று போய் கொண்டிருக்கிறார்கள் விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும். இந்த நேரத்தில்தான் ரெமோவும், றெக்க யும் ஒரே நாளில் திரைக்கு வந்து மோதும் போலிருக்கிறது.
இந்த இக்கட்டான சூழலை தவிர்க்கதான் நினைத்தாராம் விஜய் சேதுபதி. அவரே றெக்க படத்தின் தயாரிப்பாளரிடம், “சார்… நாம வேணும்னா ஒரு வாரம் தள்ளி வரலாமா?” என்று கேட்க, “அதெல்லாம் முடியாது. ரெமோ திரைக்கு வர்ற அதே நாள் நம்ம படமும் வருது” என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம் றெக்க படத்தின் தயாரிப்பாளர்.
தர்மதுரை வந்து அந்த போஸ்டர் காய்வதற்குள் ஆண்டவன் கட்டளை வந்துவிட்டது. ஆண்டவன் கட்டளை போஸ்டர் காய்வதற்குள் றெக்க வரப்போகிறது. போகிற போக்கை பார்த்தால் விஜய் சேதுபதியை வெள்ளிக்கிழமை ஹீரோ ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது.
அதுக்கென்ன… ரெண்டு படத்தையுமே நாங்க ரசிச்சுட்டு போறோம் என்று ரசிகர்கள் முடிவெடுத்தால், அதுதான் நாட்டு சர்க்கரையை நாக்குல தடவிகிட்டு பேக்குலயும் எடுத்துட்டு போற அளவுக்கு ருசியான விஷயம்!
To listen audio click below :-