நானும் விஜய்சேதுபதியும் கார்த்திகா கலகல
பெண்மையின் உண்மையும், ஆண்மையின் வன்மையும் கலந்தவர்தான் கார்த்திகா என்றால், அதை அவரே ஆமாங்க என்று ஒப்புக் கொள்வார். அறிமுகமான போதே சிம்புவால் வர்ணிக்கப்பட்டவர் (சத்தியாமாக நல்ல மாதிரியில்லை) ‘அவர் ஆம்பிளை மாதிரி இருக்கார். அதனால் எனக்கு வேற ஹீரோயின் வேணும்’ இவர் அடம்பிடிக்க, ‘கோ’ படத்திலிருந்து சிம்புவையே நீக்கிவிட்டார் கே.வி.ஆனந்த். இப்படி தன்னை சுற்றி கலவரங்களால் பின்னப்பட்ட கார்த்திகா, தற்போது நடித்து வரும் ‘புறம்போக்கு’ படத்தில்தான் அவரது நிஜமான பாடி லாங்குவேஜுக்குள் வந்திருக்கிறார். யெஸ்… ‘இந்த படத்தில் உன்னையும் சேர்த்து நாலு ஹீரோம்மா…’ என்று அடிக்கடி கூறி வருகிறாராம் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன்.
என்னது ஹீரோவா? ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், மூவரும்தான் ஹீரோ. உன்னையும் சேர்த்து என்றால்? ஆமாங்க ஆமாம்… இந்த படத்தில் முண்டா தட்டி முடிந்தவரை ஃபைட் பண்ணியிருக்கிறாராம் கார்த்திகா. அதனால்தான் ஹீரோ என்று இவரையும் லிஸ்ட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார் ஜனா.
எவ்வளவுதான் உடம்பு குஸ்தி சண்டைக்கு தயாராக இருந்தாலும், மனசு புஷ்பம்தானே? அண்மையில் இந்த படத்தின் ஷுட்டிங்குக்காக குலுமணாலி போயிருந்தாரல்லவா? போன இடத்தில்தான் அங்கு வசிக்கும் மக்களுக்காக கவலைப்பட்டிருக்கிறார் கார்த்திகா. எந்நேரமும் பனிப்பொழிவு இருந்துகிட்டேயிருக்கு அங்க. சும்மா நடந்து போக வரவே ரொம்ப சிரமமா இருக்கு. ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் எப்படிதான் எல்லாத்தையும் சமாளிச்சு வாழுறாங்களோ? அவங்களுக்காக ரொம்ப கவலைப்படறேன் என்கிறார் கார்த்திகா.
பிறரை எண்ணி கவலைப்படுகிற நடிகைகளும் இருக்காங்களா? வாவ்…