விஜய் சேதுபதி ஒரு தெலுங்கர்! ஆரம்பிச்சுட்டாங்கப்பா?

பாக்ஸ் ஆபிசை தலைகீழாக புரட்டிப் போட்டு வருகிற ஹீரோக்கள் கூட சொல்ல அஞ்சுகிற ஒரு விஷயத்தை, மனித நேயத்தோடு அணுகியிருக்கிறார் விஜய் சேதுபதி. ராஜீவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் பேரறிவாளன் தனது சிறைவாசத்தை 25 ஆண்டுகள் நிறைவு செய்யப் போகிறார். அவர் குற்றமற்றவர் என்று விசாரணை அதிகாரியே இப்போது ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அவரை விடுவிக்க வேண்டும் என்ற குரல் திரையுலகத்திலும் ஒலித்து வருகிறது. இயக்குனர் ராம், இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் இதற்கான குரலை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் தன்னுடைய கருத்தையும் கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கூறிய அவர், இதை வலியுறுத்தி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையில் வேலூரிலிருந்து சென்னை வரைக்கும் நடைபெறவிருக்கும் பேரணியில் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் விஜய் சேதுபதியின் இந்த கோரிக்கை விஷயத்தில் கருத்து முரண்பட்டு நிற்பதாக தெரிகிறது சீமானின் நாம் தமிழர் இயக்கம். அதற்கு காரணமாக அவர் முன் வைப்பது விஜய் சேதுபதி ஒரு தெலுங்கர் என்பதுதானாம்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் சிபிசந்தர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அது பின்வருமாறு-

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலைக்காக நடிகர் விஜய் சேதுபதியின் போராட்ட குரல் எமக்கு தேவையற்றது அனுமதிக்கமாட்டோம் – நாம் தமிழர் குழு

ஏழு தமிழர்களின் விடுதலைக்காக மனிதநேயம் உள்ள யாவரும் போராடலாம் நோக்கம் என்பது அவர்களின் விடுதலையாகத்தான் இருக்க முடியும் ஆனால் நடிகர் விஜய்சேதுபதி போராடக்கூடாது என நாம் தமிழர் குழுவை சேர்ந்தவர்கள் சொல்லுவது ஏன் ? அவர்கள் கூற்றுப்படி சேதுபதி தெலுங்கர் அதனால் போராட்ட குரல் அவசியமற்றது என கூறுகிறார்கள் இதே போராட்ட குரலை தம்பி இயக்குனர் ரஞ்சித் அவர்கள் உயர்த்தியபோது இவர்கள் ஏன் வரவேற்கவில்லை ?

இயக்குனர் களஞ்சியம் அவர்கள் ஒரு ஈழத்தமிழருக்கு உதவி செய்துவிட்டார் என்பதற்காக இதே சீமான் அவர்கள் களஞ்சியத்திடம் ஈழத் தமிழருக்கு உதவி செய்ய நீ யார் என கேட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்ததை நினைவு படுத்துகிறேன் … அப்படியானால் நாம் தமிழர் குழுவின் நோக்கம் என்ன ? ஈழ விவகாரத்தில் நாம் தமிழரை தவிர தலையிட கூடாது பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்காக நாம் தமிழரை தவிர யாரும் போராட முன் வரக்கூடாது மனித நேயத்தோடு யாரேனும் முன் வருவார்களேயானால் அவர்களின் பரம்பரை பஞ்சாங்கத்தை வைத்தும் ஆய்வே செய்யாத டி என் ஏ சோதனையை வைத்தும் அவர்களை வந்தேறிகள் என வசைபாடுவதை நாம் தமிழர் குழு தொடர்ந்து செய்து வருகிறது ….
நாம் தமிழரை தவிர வேறு யாரும் எங்களுக்காக போராட வேண்டாம் என தாயார் அற்புதம்மாவும் தம்பி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் கூறாதவரை அவர்களுக்காக போராட முன் வருவோரை தடுக்கும் எந்த யோக்கியதையும் நாம் தமிழர் குழுவுக்கு இல்லை அதே போல ஈழ விடுதலை என்பது சிங்கள பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் மக்களுக்கானது ஒடுக்கப்படுவதை எதிர்க்கும் எவருக்கும் ஈழ விடுதலைக்கு குரல் கொடுக்கும் உரிமையும் கடமையும் உண்டு என்பதை நாம் தமிழர் குழு புரிந்துகொள்ள வேண்டும் … ஏழு தமிழர்களின் விடுதலைக்கான போராட்டக்களம் மாந்த நேயமுள்ளவர்களால் வலுப்பெற்று வருகிற நிலையில் அதை வலுவிழக்க செய்யும் பல்வேறுவிதமான சூழ்ச்சிகளை நாம் தமிழர் குழு செய்வதன் நோக்கம் ….

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை காங்கிரசும் பாஜகவும் நேரிடையாக எதிர்க்கிறது நாம் தமிழர் குழு ஆதரவு வேசம் தரித்து எதிர்க்கிறதோ என்ற எண்ணம் இயல்பாக எழுகிறது ….

சிபிசந்தர்
மாநில கொள்கை பரப்புச் செயலாளர்
விசிக

3 Comments
 1. Theepan says

  விஜய் சேதுபதியின் இந்த ஆதரவு குறித்து தனது முகநூல் பதில் சீமான் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

  “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 25 வருடமாக விடுதலைக்காகக் காத்துநிற்கும் என் தம்பிகள் மற்றும் அக்கா நளினி ஆகியோரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும்..தொடர்ந்து போராடி எழுவரை மீட்போம்..

  அன்பின் நெகிழ்ச்சியோடு,
  சீமான்…”

  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-praises-actor-vijay-sethupathy-255491.html

 2. Balan says

  Why are you creating negative image for seeman?

 3. idontknow says

  There is no clim that it said by NTK, It said in facebook by someone. How stupid to link NTK for unknown person clim idiots

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இந்த பாட்டை ஒருமுறை கேளுங்க. உலகமே இனிக்கும்!

https://youtu.be/zSLcx5z9ITs

Close