இன்னொரு சிம்புவாகிறார் விக்ரம்? டென்ஷனில் ‘ பத்து எண்றதுக்குள்ள ’ படம்!
கோடம்பாக்கத்தின் பரபரப்பு சிம்புவின் புலம்பல்தான்! ‘என்னை விட்டு எல்லாம் போயிருச்சு. உசுரு மட்டும்தான் மிச்சமிருக்கு’ என்று அவர் பேசியதை சற்று அதிர்ச்சியோடும் அனுதாபத்தோடும்தான் கவனிக்கிறார்கள் மக்கள். ஆனால் அவரது இந்த நிலைமைக்கு காரணம் வேறு யாருமல்ல, அவர் மட்டும்தான். தனது நிலைமை குறித்து அவர் புலம்பியதும், இனிமேலாவது அடுத்தவர்களுக்காக வாழப் போகிறேன் என்று அவர் கூறியதும் சாத்தான் வேதம் ஓதியதற்கு சமமானதுதான். இவ்வளவு புலம்புகிறவர் இப்போது கூட பாண்டிராஜ் இயக்கிவரும் இது நம்ம ஆளு படம் முடிவடைய உதவவில்லை என்பதுதான் பெரும் கொடுமை. போகட்டும்… விக்ரம் கதை என்ன?
இவருக்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கும் ஒரு முன் பகை இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சிருக்கிறது. இந்த நிலையில்தான் கோலிசோடா வெற்றிக்கு பிறகு விஜய் மில்டன் விக்ரமிடம் கதை சொல்லப் போனார். அவருக்கும் பிடித்துப் போனது. நடுவில் எங்கோ கிராஸ் ஆன முருகதாஸ், இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்வதற்கு முன்பு வரை இது மினிமம் பட்ஜெட் படமாகவேதான் இருந்தது. முருகதாஸ் தயாரிக்க துவங்கியபின், விக்ரமின் வெறும் பற்கள் கூட தங்கப்பல்லாக மாறி தகதகக்க ஆரம்பித்துவிட்டது.
படத்திற்கு வேண்டுமென்றே செலவு இழுத்துவிடுகிறாராம். ஒவ்வொரு முறையும் ‘எடுத்த வரைக்கும் படத்தை பார்க்கலாம்’ என்று கூறியே படத்தை போடச் சொல்லும் அவர், ‘இது சரியில்ல… அது சரியில்ல… ரீ ஷுட்டிங் போகலாம்’ என்று சொல்லி சொல்லியே பெரும் செலவை இழுத்துவிடுகிறாராம். சொன்ன பட்ஜெட்டை விட பல மடங்கு ஆக்கிவிட்டாராம் இப்போது. கிட்டதட்ட ஐ பட பட்ஜெட்டில் பாதியை தொட்டு நிற்கிறதாம் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் பட்ஜெட் லட்சணம்!
சிம்பு ஷுட்டிங் வராமலே வயிறெரிய வைப்பார். இவர் வந்து வயிறெரிய வைக்கிறார். பெரிய வித்தியாசமில்லை என்று புலம்புகிறது படக்குழு! சிம்பு மாதிரி விக்ரமுக்கும் வேறு எங்காவது மேடை கிடைக்கும். நாமும் அந்த புலம்பலை பார்க்கதானே போகிறோம்!